இப் ஆறு

ஜார்சுகுடா அருகே இப் நதி

வடகிழக்கு மத்திய இந்தியாவில் மகாநதி ஆற்றின் துணை நதியாக இப் ஆறு (Ib River) உள்ளது. இது ஈராக்குது நீர்த்தேக்கத்தில் நேரடியாகப் பாயும் மகாநதி நதியுடன் இணைகிறது. இந்த ஆறு 762 மீட்டர்கள் (2,500 அடி) உயரத்தில் பாண்ட்ராபேட்டிற்கு அருகிலுள்ள மலைகளில் உருவாகிறது. இது ராய்கர் மாவட்டம் மற்றும் சத்தீசுகரின் ஜாஷ்பூர் மாவட்டம் மற்றும் ஒடிசாவின் ஜார்சுகுடா மற்றும் சுந்தர்கட் மாவட்டம் வழியாகச் சென்று இறுதியாக மகாநதியுடன் ஈராக்குது அணையில் கலக்கிறது.

இப் நதி அதன் வளமான நிலக்கரி படுகைக்காகப் பெயர்பெற்றது. மகாநதி நிலக்கரி படுகை இப் நதியின் கரையில் அமைந்துள்ளது. இப் ஆற்றின் கரையில் பல தொழிற்சாலைகள் செழித்துள்ளன. கிழக்கு இந்தியாவின் மிக முக்கியமான தொழில்துறை மண்டலங்களில் ஒன்றாக இப் பள்ளத்தாக்கு பகுதிகள் கருதப்படுகின்றன. இந்த நதி சுமார் 252 கிலோமீட்டர்கள் (157 mi) தூரம் ஓடி மற்றும் 12,447 சதுர கிலோமீட்டர்கள் (4,806 sq mi) பரப்பினை வளப்படுத்துகிறது.[1]

இபி நதியின் அருகிலுள்ள பல பகுதிகளில் சுற்றுலாப் சென்று பார்வையிட வாய்ப்புள்ளவைகளாகள் உள்ளன. கடந்த காலங்களில் வற்றாத இந்த ஆற்றங்கரையில் நிரந்தர வாழ்விடத்தை உருவாக்க சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவின் பழங்குடி குழுக்களுக்கு ஊக்கமளித்ததாக நம்பப்படுகிறது. மேலும், இப் ஆற்றின் புராண முக்கியத்துவம் குறித்து ஏராளமான நாட்டுப்புறக் கதைகள் உள்ளன.

நீர்நிலை பகுதி

இது ஜஷ்பூர் மாவட்டத்தில் சுமார் 25000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இப் ஆறு ஹிராகுர்டில் மகாநதியுடன் சந்திக்கிறது.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya