இமாம் ஹுசைன்![]() இமாம் ஹுசைன் (Husayn ibn Ali or Al-Ḥusayn ibn ‘Alī ibn Abī Ṭālib) (அரபி: الحسين ابن علي ابن أبي طالب; (பிறப்பு: 10 சனவரி 626 – இறப்பு: 10 அக்டோபர் 680), இறைத்தூதர் முகமது நபியின் பேரனும், அலீ – பாத்திமா இணையரின் இரண்டாவது மகனாக மதீனாவில் பிறந்தவர். மேலும் ஹுசைன், சியா இசுலாமின் முதல் இமாமாகவும் சியா இஸ்லாமியரால் கருதப்படுபவர். இவரது அண்ணன் அல் ஹசன் ஆவார். உமையா கலீபகத்தின் முதல் கலிபாவான முதலாம் முஆவியா 680-இல் மறைவிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது மகன் யசீதின் ஆளுநருடன், மக்களுக்காக மோதல் ஏற்பட்டு , ஹுசைன் மக்காவிலிருந்து தற்கால ஈராக்கில் உள்ள கூபா நகரத்திற்கு தனது படைகளுடன் சென்ற போது [1] கர்பலா எனுமிடத்தில் 10 அக்டோபர் 680-இல் யசீதின் படைகள் ஹுசைனை இடைமறித்து தலையை கொய்தனர். எனினும் இந்த நிகழ்வு அங்குள்ள இஸ்லாமிய எதிரிகளால் தீட்டப்பட்ட சதி என்று அப்போது தான் ஹுசைனுக்கு தெரிந்தது [2] முகமது நபியின் பேரனை கொன்ற காரணத்தினால், கலீபகத்தில் பெரும் கலவரம் மூண்டது. பின்னர் உமையா கலீபகத்தினை வீழ்த்தி விட்டு அப்பாசிய வம்சத்தவர்கள் அப்பாசியக் கலீபகத்தை நிறுவினர். [3][4] ஹுசைனின் நினைவை போற்றும் வகையில் சியா பிரிவு இசுலாமியர்கள் ஆண்டு தோறும் முகரம் மாதத்தின் பத்தாவது நாளான ஆஷூரா நாளை தியாகத் திருநாளாக கொண்டாடுகிறார்கள். நல்லடக்கம்![]() கர்பலா நகரத்தில் இமாம் ஹுசைன் கொல்லப்பட்ட இடத்தில் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.[5] இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்மேற்கோள்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia