இம்புமலாங்கா
இம்புமலாங்கா (Mpumalanga, /əmˌpuːməˈlɑːŋɡə/ (ⓘ) (கிழக்கு டிரான்சுவால் என்ற பெயர் ஆகத்து 24, 1995 முதல் மாற்றப்பட்டது), தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். சுவாசி,சோசா,டெபேலே, சுலு மொழிகளில் இதன் பொருள் கிழக்கு அல்லது நேரடி மொழிபெயர்ப்பாக "சூரியன் உதிக்கும் இடம்" ஆகும். இந்த மாகாணம் தென்னாப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது; குவாசுலு-நதால் மாகாணத்திற்கு வடக்கிலும் சுவாசிலாந்து, மொசாம்பிக் நாடுகளின் எல்லையிலும் அமைந்துள்ளது. இது தென்னாப்பிரிக்காவின் நிலப்பகுதியில் 6.5% ஆகும். வடக்கில் லிம்போபோ, மேற்கில் கடெங், தென்மேற்கில் விடுதலை இராச்சியம் மாகாணங்களுடனும் தெற்கில் குவாசுலு-நதால் மாகாணத்துடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரமாக நெல்சுபுரூய்ட் உள்ளது. 1994இல் மாகாணங்கள் சீரமைக்கப்படுவதற்கு முன்னதாக இது டிரான்சுவாலின் அங்கமாக இருந்தது. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia