இரண்டாம் சிவமாறன்

இரண்டாம் சிவமாறன் (788–816) என்பவன் மேலைக் கங்க மரபைச் சேர்ந்த மன்னன். இவன் சிறீபுருசனுக்கு பின் வந்த மன்னனாவான்.

இவன் நெருக்கடியான காலகட்டத்தில் ஆட்சி செய்தவனாவான். இவன் இராட்டிரகூட மன்னர்களை எதிர்த்தமையால் மூன்றாம் கோவிந்தனால் சிறைப்படுத்தப்பட்டான்.

கோவிந்தன் வட நாட்டுப் போரில் ஈடுபட்டபோது, சிவமாறன் சேர, பாண்டிய, பல்லவ மன்னர்களோடு சேர்ந்து எதிர்க் கூட்டணியில் பங்கு கொண்டான். வடக்கிலிருந்து திரும்பிய கோவிந்தனோடு நிகழ்ந்த போரில் கங்கர்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டது.

உசாத்துணை

  • தகடூர் வரலாறும் பண்பாடும் - இரா.இராமகிருட்டிணன். பக்.174
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya