இரந்தீர் சிங்
இரந்தீர் சிங் (Randhir Singh-பிறப்பு 1966) என்பவர் சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். இரந்தீர் சிங் கலாகோட் சுந்தர்பனி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2] இளமைஇரந்தீர் சிங், சம்மு காசுமீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கலாகோட்டை சேர்ந்தவர். இவரது தந்தை கியான் சிங்.[3] அரசியல்2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலாகோட் சுந்தர்பனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சிங் வெற்றி பெற்றார். இவர் 35,010 வாக்குகளைப் பெற்று, தனக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்ற ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் யாசூ வர்தன் சிங்கை 14,409 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia