இராஜேந்திர பட்டினம் சுவேதாரண்யேசுவரர் கோயில்
சுவேதாரண்யேஸ்வரர் கோயில் என்பது சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1] அமைவிடம்இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்திலுள்ள இராஜேந்திரபட்டினம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம், திருவெருக்கத்தம்புலியூர் என்றும் புராணக் காலத்தில் அறியப்பட்டுள்ளது. இச்சிவாலயத்தில் கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன. இத்தலத்தின் தலமரமாக வெள்ளெருக்கு அறியப்படுகிறது. கோயில் வரலாறுவியாக்ரபாதர் வேடன் புலிக்கால் முனிவராக வழிபட்ட தலம்.[2] முருகக்கடவுள் உருத்திரசன்மராகத் தோன்றி வழிபட்டதால் குமரேசம் என்றும் தேவகணங்கள் வழிபட்டதால் கணேசுரம் என்றும் பெயர் பெற்ற தலம்[3] கோயில் அமைப்புவைணவத் திருத்தலமான ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி இத்தலத்தின் அருகிலுள்ளது.[3] கோயில் சிறப்புநைமிசாரண்ய முனிவர்கள் வெள்ளெருக்கு மரங்களாக இத்தலத்தில் உரு எடுத்தனர். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் அவதாரத்தலம்.[3] மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia