இராணி ராசமணி![]() இராணி ராசமணி (Rani Rashmoni) (28 செப்டெம்பர் 1793 - 19 பெப்பிரவரி 1861) கொல்கத்தாவின் தக்சிணேசுவர் காளி கோயிலின் நிறுவனர் ஆவார். மேலும் இவர் இராமகிருஷ்ணரை கோயிலின் பூசகராக நியமித்த பின்னர் அவருடன் இவர் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தார். இவரின் மற்ற கட்டுமான படைப்புகளில் கங்கை ஆற்றில் அன்றாடம் குளிக்கும் யாத்ரீகர்களுக்காக சுவர்ணரேகா ஆற்றிலிருந்து பூரி வரை சாலை அமைத்தல், பாபு படித்துறை (பாபு ராஜசந்திர தாஸ் படித்துறை என்றும் அழைக்கப்படுகிறது), அஹிரிடோலா படித்துறை மற்றும் நிம்தலா படித்துறை ஆகியவை அடங்கும். இம்பீரியல் நூலகத்திற்கும் (இப்போது இந்திய தேசிய நூலகம்), இந்து கல்லூரிக்கும் (இப்போது மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா) கணிசமான தனது கொடையை வழங்கினார்.[1] இவரது நினைவாக தற்போது, "லோகமாதா இராணி ராசமணி" அமைப்பானது மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாவின், நிம்பித்தில் அமைந்துள்ளது.[2] வாழ்க்கை வரலறுஇவர், 1793 செப்டம்பர் 28இல் பிறந்தார். இவரது தந்தை, அரேகிருஷ்ணா தாஸ், கோனா கிராமத்தில், இன்றைய வடக்கு 24 பர்கானா மாவட்டத்தின் அலிசாகரில் வசித்து வந்தார். இவரது தாயார் இரமாபிரியா தேவி இவரது ஏழு வயதில் இறந்தார். கொல்கத்தாவின் ஜான்பஜார் நகரைச் சேர்ந்த பணக்கார ஜமீந்தாரான பாபு ராஜச்சந்திர தாஸ் என்பவருக்கு இவரது பதினொரு வயதில் திருமணம் செய்து வைக்கபட்டார். இந்த இணையருக்கு நான்கு மகள்கள் இருந்தனர். ![]() 1836 இல் தனது கணவர் இறந்த பிறகு, அவரது ஜமீன்தாரி மற்றும் நிதிகளின் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டார். ஆங்கிலேய எதிர்ப்புஇவர் ஆங்கிலேயர்களுடன் மோதல்களைக் கொண்டிருந்தார். கங்கையின் ஒரு பகுதியை ஆங்கில அரசிடம் இருந்து குத்தகைக்கு எடுத்து. அதைக்கொண்டே அவர்களின் கப்பல் வர்த்தகத்தைத் தடுத்து அதன் மூலம், ஆற்றில் மீன்பிடிக்க ஆங்கிலேயர்கள் விதித்த வரியை இரத்து செய்யுமாறு கட்டாயப்படுத்தினார். இந்த வரி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது. அமைதிக்கு இடையூறு விளைவித்தன என்ற குற்றச்சாட்டின் பேரில் கடவுள் ஊர்வலங்கள் பிரிட்டிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டபோது, இவர் உத்தரவுகளை மீறினார். இவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆங்கிலேயர்கள் திரும்பப்ப் பெற்றனர். பணிகள்இவர், ஏராளமான தொண்டுப் பணிகளையும் சமுதாயத்திற்கான பிற பங்களிப்புகளையும் செய்துள்ளார். சுவர்ணரேகா ஆற்றிலிருந்து புரி வரை யாத்ரீகர்களுக்காக சாலை அமைப்பதை இவர் மேற்பார்வையிட்டார். கங்கையில் தினசரி குளிப்பவர்களுக்கு பாபு படித்துறை (தனது கணவரின் நினைவாக), அஹிரிடோலா படித்துறை மற்றும் நிம்தலா படித்துறை போன்ற படித்துறைகளை கட்ட இவர் நிதியளித்தார். இவர் அப்போதைய இம்பீரியல் நூலகத்திற்கும் (இப்போது இந்தியாவின் தேசிய நூலகம் ) மற்றும் இந்து கல்லூரிக்கும் (இப்போதுமாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா) நன்கொடைகள் அளித்தார். இளவரசர் துவாரகநாத் தாகூர் இங்கிலாந்துக்குச் செல்வதற்காக தனது ஜமீந்தாரியின் ஒரு பகுதியை (தெற்கு 24 பர்கானாக்களில் இன்றைய சந்தோஷ்பூர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் ஒரு பகுதி) இவரிடம் அடமானம் வைத்திருந்தார். அப்போது சுந்தரவனக்காடுகளின் ஒரு பகுதியாக இருந்த இந்த நிலம் சதுப்பு நிலமாகவும், கிட்டத்தட்ட வசிக்க முடியாததாகவும் இருந்தது. சில குண்டர்களின் குடும்பங்களைத் தவிர, இந்த பகுதி தங்கியிருக்க வசதியற்றதாக இருப்பதைக் கண்டறிந்தது. இவர் அந்த குடும்பங்களை வற்புறுத்தி, சுற்றியுள்ள நீர்நிலைகளில் மீன்வளத்தை உருவாக்க அவர்களுக்கு உதவினார். அது பின்னர் பெரிய பணக்காரக் குடியிருப்பாக மாறியது. அவர்கள் படிப்படியாக கொள்ளையடிக்கும் தங்கள் 'தொழிலை' கைவிட்டு, மீனவர் சமூகமாக மாறினர்.[3] இவ்வளவு பெரிய ஆன்மீக இயல்பு கொண்டிருந்தாலும் சமூகம் இவரிடம் சாதி பாகுபாடு காட்டியது. சாசி-கைபார்த்தா குடும்பத்தில் பிறந்து, ஒரு நடுத்தர சாதி சூத்திர வம்சாவளியாக இருந்தால்,[4] எந்த பிராமணரும் இவர் கட்டிய கோவிலில் பூசகராக இருக்க வரவில்லை. இதனால் இவர் கட்டிய கோயிலை ஒரு பிராமணருக்கு தானமாக அளிக்கவேண்டும் என்றும், அந்த பிரமனரே கோயிலில் கடவுள் சிலையை பிரதிட்டை செய்வார். அதன்பிறகே அந்தக் கோயில் வழிபாட்டுக்கு தகுதியானதாகும் என்று ஆலோசனைக் கூறப்பட்டது. இதனால் அந்த வேளையில் கல்கத்தாவில் இருந்து வந்த இராம் குமார் சட்டோபாத்தியாயா என்ற ஏழை பிராமணருக்கு தான் கட்டிய காளி கோயிலையும் அந்த நிலத்தையும் தானமாக அளித்தார். பூசாரி சப்போபாத்தியாயா கோயிலில் சிலையை நிறுவினார். 1855 இல் கோயில் வழிபாட்டுக்குத் திறக்கபட்டது. சிறிது காலத்திற்குப் பிறகு சட்டாபாத்தியாவின் தம்பியான கடாதர் என்பவர் அங்கு வந்து சேர்ந்தார். அவர்தான் பின்னாளில் இராமகிருஷ்ண பரமஹம்சர் என்று புகழ்பெற்றவராவார். ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் பாரம்பரிய துர்கா பூஜை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஜான்பஜாரில் உள்ள இவரது வீடு இருந்தது. இது பாரம்பரியமாகவும் ஆடம்பரமாகவும் கொண்டாடப்பட்டது. இதில் இரவுநேர நாடக அரங்கங்களும் அடங்கும். 1861இல் இவர் இறந்த பிறகு, இவரது மருமகன்கள் துர்கா பூஜையை அவரவர் வளாகத்தில் கொண்டாட முடிவு செய்தனர்.[5] பரவலர் பண்பாட்டில்![]() கலிபிரசாத் கோஷ் இயக்கத்தில் "இராணி ராசமணி" (1955) என்ற பெயரில் வங்காள மொழியில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது. இதில் பிரபல நாடக ஆளுமையும் நடிகையுமான மோலினா தேவி நடித்திருந்தார் .[6] ஜீ பங்களா என்ற தொலைக்காட்சியில் இராணியின் வாழ்க்கையை சித்தரிக்கும் தினசரி நாடகத் தொடர் ஒளிபரப்பப்பட்டது. இது "கருணாமோய் இராணி ராசமணி" என்ற தலைப்பில் 24 சூலை 2017 முதல் தினமும் ஒளிபரப்பப்பட்டடது.[7][8] நினைவுச்சின்னங்கள்
மேலும் படிக்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia