இரிச்சர்டு இவான்சு சூல்டெசு
இரிச்சர்டு இவான்சு சூல்டெசு (Richard Evans Schultes, SHULL-tees;[1]) சூல்டெசு The Plants of the Gods: Their Sacred, Healing, and Hallucinogenic Powers (1979) போன்ற சிறப்பு மிக்க நூல்களை எழுதியுள்ளார். LSD யைக் கண்டுபிடித்த வேதியியலாளர் ஆல்பர்ட் ஹாஃப்மேனுடன் இணைந்து எழுதிய, அவருடைய நூல் மிகப் பிரபலமான படைப்பாகக் கருதப்படுகிறது.[2] அந்நூல் கிறிசுடியன் ராட்சு, 1998 மூலம் செருமன் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் விரிவாக்கப்பட்ட இரண்டாவது பதிப்பாகும். வாழ்க்கை வரலாறுசூல்டெசு, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள பாசுடனில் பிறந்தார். அவரது தந்தை ஒரு குழாய் பணியாளர்.[1] கிழக்கு பாஸ்டனில் படித்தார். தென் அமெரிக்க மழைக்காடுகளில் அவருக்கு இருந்த ஆர்வம், அவரது குழந்தைப் பருவத்தில் இருந்தே வளர்ந்தது. அவர் படுக்கையில் இருந்தபோது, 19 ஆம் நூற்றாண்டின் ஆங்கில தாவரவியலாளர் ரிச்சர்ட் ஸ்ப்ரூஸ் என்பவரால் அமேசான் மற்றும் ஆண்டிஸில் உள்ள தாவரவியலாளரின் குறிப்புகளின் பகுதிகளை அவரது பெற்றோர் வாசித்தனர்.[1] அவர் ஹார்வர்டில் முழு உதவித்தொகை பெற்றார்.[1] 1933 இல் ஆர்டுவார்டு பல்கலையில், சூல்டெசு மருத்துவத்தைத் தொடர திட்டமிட்டார். இருப்பினும், ஆர்க்கிடாலஜிஸ்ட் மற்றும் ஆர்டுவார்டு தாவரவியல் அருங்காட்சியகத்தின் இயக்குனரான ஓக்சு அமேசு (Oakes Ames) அவர்களால் கற்பிக்கப்படும் "தாவரங்கள் மற்றும் மனித விவகாரங்கள்" என்ற உயிரியல் எடுத்ததால், பிறகு, மருத்துவப்படிப்பைப் படிக்கும் திட்டத்தை கைவிட்டார். அமேசு ஒரு வழிகாட்டியானார். சூல்டெசு தாவரவியல் அருங்காட்சியகத்தில் உதவியாளரானார்; அவரது இளங்கலை மூத்த ஆய்வறிக்கை ஓக்லஹோமாவின் கியோவாவில் (Kiowa) பயோட்(peyote) கற்றாழையின் சடங்கு பயன்பாட்டைப் பற்றியது. மேலும் அவர் 1937 இல் உயிரியலில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார் [1] எய்ம்சின் கீழ், ஆர்வர்டில் தொடர்ந்து, 1938 இல் உயிரியலில் முதுகலைப் பட்டமும், 1941இல் முனைவர் (Ph.D.) பட்டத்தினையும் தாவரவியலில் பெற்றார். கியூரே(curare) தயாரிக்கப் பயன்படும் தாவரங்களைப் படிப்பதற்காக, அமெரிக்க தேசிய ஆராய்ச்சி கவுன்சிலின், உயர் ஆய்வு ஊதியம் (fellowship) பெற்றார்.
விருதுகள்சூல்டெசு பல விருதுகளையும், உயர் மரியாதைகளையும் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia