இலட்சுமேசுவரம்
இலட்சுமேசுவரம் (Lakshmeshwara) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் கதக் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வட்டமான கஜேந்திரகாட் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். [1] இது கதக்கிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், ஹூப்ளியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் உள்ளது. [2] இது ஒரு விவசாய வர்த்தக நகரமாகும். இந்த வரலாற்று நகரத்தில் சிவன் கோயினான சோமேசுவரர் கோயில் உட்பட பல முக்கியமான கோயில்கள் உள்ளன. இந்த ஊரில் இரண்டு பழங்கால சமணக் கோவில்களும் உள்ளன. அத்துடன் முஸ்லிம்களின் குறிப்பிடத்தக்க ஒரு பள்ளிவாசலும் உள்ளது. பல சிறிய ஆலயங்கள், ஒரு தர்கா, கோடியெல்லம்மா கோயில், முக பசவண்ணா சன்னதி, சூரியநாராயணரின் பிரமாண்டமான சிலை ஆகியவையும் இங்கு அமைந்துள்ளது. நிலவியல்இந்த நகரம் 15.13 ° வடக்கிலும், 75.47 ° கிழக்கிலும் உள்ளது. [3] இதன் சராசரி உயரம் 634 மீட்டர் (2080 அடி ) ஆகும். புள்ளிவிவரங்கள்2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[4] இந்நகரத்தின் மக்கள் தொகை 33,411 ஆகும். ஆண்களில் மக்கள் தொகையில் 51%, பெண்கள் 49%. இந்த ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 62% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 70%, பெண் கல்வியறிவு 53%. இந்த ஊரில், 13% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள். வரலாறுஇந்நகரம் ஏராளமான கலாச்சாரத்திற்கும், இலக்கியங்களுக்கும் பிரபலமானது. இது கர்நாடகாவில் வளமான பாரம்பரியம் கொண்ட இடமாகும். எனவே இது திருலுகன்னட நாடு என்று அழைக்கப்படுகிறது. பல மன்னர்கள் இந்த இடத்திற்கு ஆதரவளித்துள்ளனர். இந்நகரம் பண்டையகாலத்தில் ஹுலிகெரே அல்லது புலிகெரே என அழைக்கப்பட்டது. [5] புலிகெரே இதன் தலைநகராக இருந்தது. [6] புலிகெரே என்றால் புலிகளின் குளம் என்று பொருள். புரிகெரே, பொரிகெரே, புரிக்கநகர் மற்றும் புலிகநகர் ஆகியவை இதன் பிற பெயர்களாகும். ஆதிகவி பம்பா தனது புகழ்பெற்ற கவிதைகளை இங்கு எழுதினார். பல சமண புனிதர்களும் எழுத்தாளர்களும் இங்கு தழைத்தோங்கியுள்ளனர்.[6] அவற்றில் தேவச்சக்ரா பட்டாரகர், சங்கநாச்சார்யர், ஹேமதேவாச்சார்யர், பத்மசேனர், திரிபுவன சந்திர பத்மிதர், ராம திவாச்சார்யர் ஆகியோர் இதில் அடங்குவர். சோமேசுவரர் கோயில் வளாகம்இங்குள்ள உள்ள மிக முக்கியமான நினைவுச்சின்னம் சோமேசுவரர் கோயில் வளாகம் (11 ஆம் நூற்றாண்டு) ஆகும். [7] மூன்று முக்கிய நுழைவாயில்களைக் கொண்ட இக்கோயில் வளாகம் உயரமான சுவர்களால் சூழப்பட்டுள்ளது. இது சாளுக்கிய கட்டிடக்கலைக்கு ஒரு அற்புதமான மாதிரியாகும். கோயில் வளாகத்தின் நடுவில், சோமேசுவரருக்கு ஓர் கோயில் உள்ளது. முக்கியமாக சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல சிறிய கோயில்கள், வளாகத்தின் சுவருடன், கரும்பாறையில் கட்டப்பட்டுள்ளன. வளாகத்தில் சில அரங்குகள் பக்தர்களுக்கு ஓய்வெடுப்பதற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் பாரம்பரிய கட்டமைப்புகளைக் கொண்ட சோமேஸ்வரர் கோயிலில் ஒரு கர்ப கிரிஹா, ஒரு அர்த்த மண்டபம் அல்லது பாதியிலேயே மண்டபம், ஒரு நவரங்கா மற்றும் முக முகபா அல்லது நுழைவு மண்டபம் ஆகியவை அடங்கும். இக்கோயில் வளாகத்தில், பல கன்னட கல்வெட்டுகள் உள்ளன. [8] 50 க்கும் மேற்பட்ட கல் கல்வெட்டுகள் (பதிவுகள்) கலாச்சார முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia