கதக் மாவட்டம்

கதக் மாவட்டம்
—  மாவட்டம்  —
கதக் மாவட்டம்
அமைவிடம்: கதக் மாவட்டம், கருநாடகம்
ஆள்கூறு 15°25′00″N 75°37′00″E / 15.41667°N 75.61667°E / 15.41667; 75.61667
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி கதக் மாவட்டம்
மக்கள் தொகை 10,64,570 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் https://gadag.nic.in/en/


கதக் மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கதக் நகரத்தில் உள்ளது. . 1997 ஆம் ஆண்டில் தார்வாட் மாவட்டத்திலிருந்து சில பகுதிகளைப் பிரித்து இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அமைவிடம்

இதன் வடக்கில் பாகல்கோட் மாவட்டமும், கிழக்கில் கொப்பள் மாவட்டமும், தென்கிழக்கில் பெல்லாரி மாவட்டமும், தென்மேற்கில் ஆவேரி மாவட்டமும், மேற்கில் தார்வாட் மாவட்டமும், வடமேற்கில் பெல்காம் மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.

மாவட்ட நிர்வாகம்

கதக் மாவட்டம் 7 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [1]

  1. கதக் வட்டம்
  2. முந்தராகி வட்டம்
  3. நர்குண்டு வட்டம்
  4. ரோன் வட்டம்
  5. சிராஹட்டி வட்டம்
  6. கஜேந்திரகாட் வட்டம்
  7. லட்ச்மேஷ்வர் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கதக் மாவட்டத்தின் மக்கள் தொகை 1,064,570 ஆகும். அதில் ஆண்கள் 537,147 மற்றும் 527,423 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 940 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.12%ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 85.27% , இசுலாமியர் 13.50 %, கிறித்தவர்கள் 0.32 %, சமணர்கள் 0.56 % மற்றும் பிறர் 0.35% ஆக உள்ளனர்.[2]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya