இலியானா டி 'குரூஸ் (நடிகை)
இலியானா டி'குரூஸ் (Ileana D'Cruz, பிறப்பு:1 நவம்பர் 1986) என்பவர் இந்திய-போர்த்துகீசிய நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் இந்தி, தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கிறார். ஆரம்பத்தில் வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். டி'குரூஸ் 2006 ஆம் ஆண்டு தேவதாசு என்ற தெலுங்கு மொழித் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார், இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது, இத்திரைப்படம் இவருக்கு சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது.[3] போக்கிரி (2006), ராக்கி (2006), முன்னா (2007), ஜல்சா (2008), கிக் (2009), ஜூலாய் (2012) உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இவர் போக்கிரி, ஜல்சா, கிக் ஆகியத் திரைப்படங்களுக்காக தெலுங்கு பிலிம்பேர் சிறந்த நடிகை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[4] இவர் தமிழ் திரைப்படத்துறையில் கேடி (2006) திரைப்படம் மூலம் அறிமுகமானார். 2012 இல் அனுராக் பாசு இயக்கிய பர்ஃபி! திரைப்படம் மூலம் இந்தி திரைத்துறையில் அறிமுகமானார், இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றார்.[5] மெயின் தேரா ஹீரோ (2014), ருசுடோம் (2016), ரெய்டு (2018) போன்ற வெற்றிகரமான திரைப்படங்களில் இவர் முன்னணிப் பெண்மணியாக நடித்துள்ளார். இவர் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[6] வாழ்க்கை1 நவம்பர் 1986 அன்று பம்பாயில் (இப்போது மும்பை) மாகிமில் ஒரு கத்தோலிக்க தந்தைக்கும் முசுலீம் தாய்க்கும் பிறந்தார்.[7][8][9] இவர் ஒரு இறைமறுப்பாளர்.[10] இவருக்கு 10 வயதாக இருந்தபோது இவரது குடும்பம் கோவாவின் பர்ராவுக்கு குடிபெயர்ந்தது.[11] தமிழ் படம்2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை இருந்தும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.[12] திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia