இளஞ்சேட்சென்னி
இளஞ்சேட்சென்னி வேளான், பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவர். இவர் இயற்பெயர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறார். பொ.ஊ.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் ஆதலால் இவர் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவர்கள். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனரைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், பொ.யு க்கு முந்தையவர்களாகக் கருதப்படும், பரணர்[1] என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார்[2] என்பவரும் இவரைப்பற்றிப் பாடியுள்ளனர். கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தார் சென்னி. வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவர் என இவரைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது[3]. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறியுள்ளனர். இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசியை மணந்தார். இவ்விருவருக்கும் பிறந்தவரே முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவரும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இறந்தார் என்பது முடத்தாமக் கண்ணியர் இயற்றிய பொருநராற்றுப்படை மூலம் தெரியவருகிறது. சோழ வேந்தன் இளஞ்சேட் சென்னியை அடிப்படையாகக் கொண்டு மூன்று தொகுதிகள் அடங்கிய ‘வென்வேல் சென்னி’ எனும் வரலாற்றுப் புதினத்தை எழுதியுள்ளார், இளம் எழுத்தாளர் சி.வெற்றிவேல், சாளையக்குறிச்சி. மௌரியரின் தென்னகப் படையெடுப்பு, மூவேந்தர்கள் மொழிபெயர் தேயத்தில் கூட்டுப்படை அமைத்து தமிழகத்தைக் காவல் காத்தது, சென்னி பாழிக் கோட்டையைத் தகர்த்தது ஆகிய நிகழ்வுகளின் அடிப்படையில் ‘வென்வேல் சென்னி’ புதினத்தை இயற்றியுள்ளார். பலரா?
வென்வேல் சென்னிஇது எழுத்தாளர் சி. வெற்றிவேல் என்பவரால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். மூன்று தொகுதிகளை உள்ளடக்கியது. மௌரியரின் தென்னகப் படையெடுப்பு, மூவேந்தர் கூட்டணி, வடுகப் போர், சோழ வேந்தன் இளஞ்சேட் சென்னியின் செருப்பாழிப் போர் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது. குறிப்புகள்
உசாத்துணை நூல்கள்
வெளிப்பார்வை |
Portal di Ensiklopedia Dunia