இரண்டாம் இராஜேந்திர சோழன்
இரண்டாம் இராஜேந்திர சோழன் (Rajendra Chola II) முதலாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனும், முதலாம் இராஜராஜ சோழனின் பேரனும் ஆவான். சோழ மன்னனாயிருந்த இவனது அண்ணன் சாளுக்கியமன்னனான முதலாம் சோமேசுவரனுடனான போரொன்றில் கொல்லப்பட, போரைத் தொடர்ந்து நடத்திச் சோழர்களின் தோல்வியைத் தவிர்த்தவன் இவன். பொ.ஊ. 1054 இல் போர்க் களத்திலேயே சோழ நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொண்ட இவன் 1064 ஆம் ஆண்டுவரை ஆட்சி நடத்தினான்.[1][2][3] இவன் காலத்திலும், மேற்குச் சாளுக்கியருடனான சோழரின் பகைமை நீடித்திருந்தது. அவர்களுடன் போரிட்டு வெற்றியும் பெற்றுள்ளான். கீழைச் சாளுக்கியருடனான உறவு நல்ல நிலையில் இருந்தது. தனது மகளான மதுராந்தகி என்பவள் கீழை சாளுக்கிய இளவரசனான இராசேந்திரன் என்பவனை மணந்திருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனாகி, சாளுக்கிய சோழ மரபு வழியை உருவாக்கியவன். இரண்டாம் இராஜேந்திரனைத் தொடர்ந்து, அவனுடைய தம்பியான வீரராஜேந்திரன் சோழ மன்னனானான். மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia