இவான் பெரிசிச்
இவான் பெரிசிச் (Ivan Perišić, Croatian pronunciation: [ǐʋan pěriʃitɕ];[3][4] பிறப்பு 2 பெப்ரவரி 1989) குரோவாசிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இன்டர் மிலானிலும் குரோவாசியா தேசிய அணியிலும் நடுக்கள வீரராக பக்கவாட்டில் விளையாடுகிறார். தவிர தாக்கும் நடுக்களத்தவராகவும் இரண்டாம் தாக்குபவராகவும் விளையாடக் கூடியவர். இளவயதில் அஜ்துக் இசுப்ளிட் கழகத்திலும் சோச்சோ கழகத்திலும் பயிற்சி பெற்ற பெர்சிச் புருக்கெ கழகத்தில் ஆடும்போது, பெல்ஜியத்தின் 2011ஆம் ஆண்டின் சிறந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிமுகத்தால் பொருசியா டோர்ட்மண்டு கழகத்தில் ஆட அழைக்கப்பட்டார். சனவரி 2013இல் €8 மில்லியனுக்கு வோல்சுபர்கால் எடுக்கப்பட்டார். இரண்டரை பருவங்கள் அங்கு ஆடிய பின்னர் இன்டர் மிலனுக்கு €16 மில்லியனுக்கு இடம் பெயர்ந்தார். பெரிசிச் தனது குவாரேசியா நாட்டு தேசிய அணியில் 2011இல் அறிமுகமானார்.தொடர்ந்து யூரோ 2012, the 2014 உலகக் கோப்பை, யூரோ 2016, 2018 உலகக் கோப்பை போட்டிகளில் குவாரேசியா தேசிய அணியில் பங்கேற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia