குரோவாசியா தேசிய காற்பந்து அணி
குரோவாசிய தேசிய கால்பந்து அணி (Croatia national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் குரோவாசியா நாட்டின் சார்பாக விளையாடும் கால்பந்து அணியாகும்; இதனை, குரோவாசிய கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. யுகோசுலேவியாவிலிருந்து விடுதலை பெறுவதற்கு சில காலம் முன்பே, 1991-ஆம் ஆண்டில் குரோவாசிய தேசிய கால்பந்து அணி அமைக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் ஃபிஃபா மற்றும் யூஈஎஃப்ஏ ஆகியவற்றில் உறுப்பினராக இணைந்தது.[1] பல நட்புமுறைப் போட்டிகளுக்குப் பிறகு, யூரோ 1996-க்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இவ்வணி பங்குகொண்டது. அதன்மூலம், முதன்முறையாக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பன்னாட்டுப் போட்டிக்கு குரோவாசிய அணி தகுதிபெற்றது. 1998-ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்ற குரோவாசிய அணி, அதில் சிறப்பாக செயல்பட்டு மூன்றாம் இடத்தில் முடித்தது. மேலும், அப்போட்டியின் அதிக கோல் அடித்த வீரர் டேவிட் சுகெர் குரோவாசிய அணியைச் சேர்ந்தவராவார். பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் தகுதியைப் பெற்றபிறகு, குரோவாசிய அணி ஒரு உலகக்கோப்பையிலும் ஒரு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியிலும் மட்டுமே பங்குபெறாமல் இருந்திருக்கிறது.[2] 1994 மற்றும் 1998-ஆம் ஆண்டுகளில் சிறந்த முன்னேற்றம் காட்டிய அணி என்ற பெருமைக்கு உரித்தானது. கொலம்பியாவைத் தவிரத்து குரோவாசிய அணி மட்டுமே அவ்விருதை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் வாங்கியிருக்கிறது.[3][4] ஃபிஃபாவில் இணைந்தபோது தரவரிசையில் 125 வது இடத்தில் இருந்த குரோவாசியா, 1998-ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின்னர் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது. இவ்வாறு, மிகச்சிறந்த அளவில் மேம்பாடு காண்பிக்கும் அணியாக குரோவாசியா இருக்கிறது.[5][6][7] குறிப்புதவிகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia