ஈஞ்சார் ஊராட்சி
அடிப்படை வசதிகள்தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
சிற்றூர்கள்இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்கள ஈஞ்சார் பகுதியில் கி.பி., 1236 ல் பாண்டிய மன்னரின் ஒருவரான, மறவன்மணி சுந்திரபாண்டியர் காலத்தில் கட்டிய மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. மூலவராக சிவன், சக்தியாக மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், அய்யனார் போன்ற 18 சுவாமி சிலைகள் இருந்துள்ளன. ஆனால் தற்போது எந்த சிலைகளும் இல்லை. கோயிலை சுற்றி கலை நயமிக்க கல்வெட்டுகள், சித்திரங்கள், அழகோவிய சிலைகளும் உள்ளன. திறந்த வெளியில் நந்திபகவான் உள்ளார். கோயிலோ எந்த வித பராமரிப்பு இன்றி கேட்பாரற்று உள்ளது. சுற்றியும் புதர்மண்டி காட்சி அளிக்கிறது. கட்டட சிலைகளோ துாசி படிந்து பாழ்பட்டுவருகிறது. கோயில் மூலவர் சன்னதி கீழ் பாதாள சுரங்கம் உள்ளது. இது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீவி ஆண்டாள் கோயில் செல்ல வழியாக உள்ளது. பெருமை வாய்ந்த கோயிலை இந்து அறநிலைத்துறை கையகப்படுத்தி வசதி செய்ய வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் கேட்பாரற்று உள்ளது. இங்குள்ள சுவாமி சிலைகள் திருடப்பட்டு உள்ளன. 2017ல் மூலவர் சிலை திருடுப் போனது. திருத்தங்கல் போலீஸ் வழக்குப்பதிவு செய்தும் கண்டுபிடிக்கவில்லை. நந்தி சிலையை கடத்தமுயன்றபோது ,மக்கள் விரட்டி அடித்துள்ளனர். ஈஞ்சார் கோயிலை சுற்றி தோட்டம், ரதவீதிகள், தாமரைக்குளம் என பெரிய நகரம் இருந்துள்ளது. மன்னர், போர் காலத்தில் சுரங்கம் வழியாக தப்பிக்கவும், மறைந்து வாழும் இடமாகவும்,பொன், பொருளை பாதுகாக்கும் இருப்பிடமாக இருந்துள்ளது. சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia