உமா சாரேன்
உமா சாரேன் (Uma Saren) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2014 ஆம் ஆண்டு முதல் இயார்கிராம் தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார் . திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒரு மருத்துவராகவும் உள்ளார். நாடாளுமன்றத்துக்கு இடையேயான சங்கத்தில் சந்தாலி மொழியில் பேசும் முதல் நபர் என்ற சிறப்புக்கு உரியவராகக் கருதப்பட்டுகிறார். ஆரம்ப கால வாழ்க்கைசாரேன் 1984 ஆம் ஆண்டு மே மாதம் பிறந்தார். இவரது தந்தை இந்திய இரயில்வேயில் ஓர் ஊழியராகப் பணியாற்றினார். இரண்டு சகோதரர்கள் மற்றும் பெற்றோர்களைக் கொண்டது உமா சாரேனின் குடும்பம் ஆகும். - கடுமையான வறுமையின் பிடியில் இக்குடும்பம் வாழ்ந்தது. அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக இவர் போராட வேண்டியதாக இருந்தது. 2012 ஆம் ஆண்டில் நில் ரத்தன் சீர்கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றார். உமா சாரேன் அவள் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவராவார்.[1][2] அரசியல் வாழ்க்கை2012 ஆம் ஆண்டில் உமா சாரேன் இயங்கிள்மகால் பூமிபுத்ரா மற்றும் கன்யா மருத்துவ சங்கத்தில் சேர்ந்தார், இச்சங்கத்தின் நோக்கம் வங்காள- சார்க்கண்ட் எல்லையில் உள்ள பழங்குடியினருக்கு தொலைதூர பகுதிகளில் மருத்துவ வசதிகளை வழங்குவதாகும்.[3] 2014 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சி, அப்போது நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் உமா சாரேன் இயார்கிராம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்று அறிவித்தது.[4] இத்தேர்தலில் உமா சாரேன் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மார்க்சிசுட்டுப் பிரிவைச் சேர்ந்த வேட்பாளர் புலின் பீகாரி பாசுகேவை எதிர்த்து போட்டியிட்டார்.[5] இத்தேர்தலில் 3,50,756 வாக்குகள் வித்தியாசத்தில் பாசுகேவை தோற்கடித்து உமா சாரேன் இந்தியாவின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இந்தியாவின் முதல் பெண் சந்தால் இன நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்பைப் பெற்றார்.[2][6] தனது மாநிலத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.[6] 2014 ஆம் ஆண்டில், உமா இரண்டு நிலை (இந்திய) பாராளுமன்றக் குழுக்களில் உறுப்பினராக இருந்தார், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் பற்றிய நிலைக்குழு ஒன்றும், மற்றொன்று பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவும் ஆகும்.[7] 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உமா சாரன் அவருடைய தொகுதி நிதியிலிருந்து 16.39 கோடி ரூபாயை தொகுதியின் நலத்திட்டங்களுக்காகச் செலவிட்டார். 3,000 பள்ளிகளுக்கு மின்விசிறிகள், மின் விளக்குகள் மற்றும் குளிர் குடிநீர் வசதிகள் போன்றவை இந்நலத் திட்டங்களில் அடங்கும்.[8] 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதியன்று உமா சாரேன் சன்டாலி மொழியில் பாராளுமன்றத்திற்கு இடையேயான ஒன்றியத்தில் பேசினார்.[9] இந்தியாவில் பல்வேறு பழங்குடியினர் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளைப் பற்றியும் இவர் பேசினார். ஏழு உறுப்பினர்களைக் கொண்ட இந்தியப் பிரதிநிதிகளில் ஒரே பெண்மணியாகவும் உமா சாரேன் இருந்தார்.[9][10][11] 2019 ஆம் ஆண்டு மார்ச் 12 அன்று அறிவிக்கப்பட்ட இவர் சார்ந்த கட்சியின் அடுத்த பொதுத் தேர்தலுக்கான பெயர்ப்பட்டியலில் உமா சாரேனின் பெயர் மறுபெயரிடவில்லை.[12] நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை இவர் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று கட்சிக்காரர்கள் குற்றம் சாட்டினர்.[13] மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia