உயிரித்தொழில்நுட்ப கூட்டமைப்பு இந்தியா நிறுவனம், புது தில்லி
வளர்ந்து வரும் பயோடெக் நிறுவனங்களை மூலோபாய ரீதியாக மேம்படுத்துவதற்காக பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி குழு.[3][4]
தேசிய உயிரி தொழில்நுட்ப மேம்பாட்டு உத்தி
திசம்பர் 2015இல், உயிரித்தொழில்நுட்பத் துறை தேசிய உயிர்தொழில்நுட்ப மேம்பாட்டு வியூகம் 2015–2020 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தடுப்பூசிகள், மனித மரபணு தொகுப்பு, தொற்று மற்றும் நாட்பட்ட நோய்கள், பயிர் அறிவியல், விலங்கு வேளாண்மை மற்றும் நீர்வுயிரி வளர்ப்பு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் தூய்மையான ஆற்றலுக்கான தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். உயிர்தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப களங்களில் பங்குதாரர்கள் மூலமாக இந்த நோக்கம் புதிய தயாரிப்புகளை உருவாக்கக் குறிப்பிடத்தக்க முதலீடுகளுடன் செயல்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குதல், வணிகமயமாக்கல் மற்றும் மனித வளங்களை விஞ்ஞான ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்தல் இதன் நோக்கமாகும்.[5]