ஜிதேந்திர சிங்
ஜிதேந்திர சிங் (jitendra singh, பிறப்பு: 06 நவம்பர் 1956) பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது வடகிழக்கு பிரதேச மேம்பாடு (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகிய துறைகளுக்கு]] இணை அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[2] அரசியல் வாழ்க்கைஇவர் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தலில், சம்மு காசுமீரில் உள்ள உதம்பூர் தொகுதியிலிருந்து, பாஜக சார்பில் போட்டியிட்டு, இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் 2019 ஆம் ஆண்டு இவருக்கு வடகிழக்கு பிரதேச மேம்பாடு (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia