ஊத்துக்காடு
ஊத்துக்காடு (Uthukadu) தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் வட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றியத்தில், உள்ள சிறிய கிராமம் ஆகும்..[5][6][7][8][9] தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை 48, ஊத்துக்காடு வழியாக செல்கிறது. ஊத்துக்காட்டுக்கு 4.5 கி.மீ தொலைவில் வாலாஜாபாத் பேரூராட்சியும், 19.7 கி.மீ தொலைவில் காஞ்சிபுரம் நகராட்சியும் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை 67.7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. நடைபெறும் விழாக்கள்ஊத்துக்காட்டில் பல்வேறு ஆலயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு திருவிழா என பல்வேறு காலங்களில் நடைபெறுகிறது. ஊத்துக்காட்டில் உள்ள ஆலயங்களின் பெயர்கள் பின்வருமாறு.
பள்ளிக்கூடம்ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி 1968-ல்[10] ஆரம்பிக்கப்பட்டது. ஆண், பெண் என இருபாலரும் படிக்கும் இந்தப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாறியது. மக்களின் சராசரி கல்வியறிவு 76.12% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84.17%, பெண்களின் கல்வியறிவு 67.82% ஆகும். போக்குவரத்துபுத்தகரம் (டி 1) அரசு பேருந்து, சின்னிவாக்கம் அரசு பேருந்து, பிரசன்னா தனியார் பேருந்து மற்றும் காமாட்சி சிற்றுந்து ஆகியவை ஊத்துகாட்டுக்கு இயக்கப்படுகின்றன. இவைமட்டுமல்லாமல் 2.2 கி.மீ தூரத்தில் உள்ள கூட்டுச்சாலையில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 79, 579A பேருந்து வசதி காஞ்சிபுரம், சென்னைக்கு உண்டு. வழித்தடங்களின் பட்டியல்
விளக்கம்: அ.வ- அதிக எண்ணிக்கையிலான வழித்தடங்கள், கு.வ – குறைந்த எண்ணிக்கையிலான வழித்தடங்கள்
தொழில்பெரும்பாலான மக்களுக்கு விவசாயமே தொழிலாகும். ஆனால் இன்று விவசாயம் மெல்ல அழிந்து கட்டுமான தொழில் மேலோங்க தொடங்கியுள்ளது. மதம்90 சதவீதம் இந்து மத மக்கள். அருகில் உள்ள கிராமங்கள், நகரங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia