ஊர் (கண்டம்)ஊர் (Ur) பழம்பாறை பேரூழிக் காலத்தில் 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான மீப்பெரும் கண்டம் ஆகும்;[1] இதுவே புவியின் மிகப்பழமையான கண்டமாகக் கருதப்படுகின்றது. ஆர்க்டிக்காவைவிட அரை பில்லியன் ஆண்டுகள் முன்னதாகத் தோன்றியுள்ளது. ஆனால் மற்றொரு மீப்பெரும் கண்டமான வால்பரா இதற்கு முன்னதாக, 3600/3100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக, உருவாகியிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.[2] 1000 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இது நெனாவுடனும் அட்லாண்டிக்காவுடனும் இணைந்து ரோடீனியா மீப்பெரும் கண்டமாக உருவானது. ஓர் பிரிபடாத நிலப்பகுதியாக இருந்து வந்த ஊர் பாஞ்சியா லோரேசியாவாகவும் கோண்டுவானாவாகவும் உடைந்தபோது இதுவும் பிரிபட்டது.[3] உருவாக்கமும் பிளவுபடலும்ஊர் கண்டத்து பாறைகள் தற்கால ஆப்பிரிக்கா, ஆஸ்திரலேசியா, இந்தியத் துணைக்கண்டம் என்ற இந்த முன்று நிலப்பகுதிகளின் அங்கங்களாக உள்ளன.[3] ஊர் உருவான காலத்தில் புவிப்பரப்பில் இருந்த ஒரே கண்டமாக அது இருந்திருக்கலாம்; தற்கால ஆஸ்திரலேசியாவை விட சிறியதாக இருந்திருக்கலாம் என்றாலும் இது ஒரு மீப்பெருங்கண்டமாக கருதப்படுகின்றது. புவிப்பரப்பில் ஊர் ஒரே கண்டமாக இருந்தபோது மற்ற நிலப்பகுதிகள் சிறுசிறு பாறைத் தீவுகளாக இருந்திருக்கலாம். எனவே இவை கண்டங்களாகக் கருதப்படவில்லை. காலக்கோடு
மேற்சான்றுகள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia