எகிப்து தேசிய காற்பந்து அணி
எகிப்து தேசிய காற்பந்து அணி (Egypt national football team, மிசிரி மொழி: فريق مصر لكورة القدم), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் எகிப்து நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, எகிப்தியக் கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. 1921 ஆம் ஆண்டில் இச்சங்கம் உருவானது. இவ்வணி ஆரம்ப காலம் தொட்டு கெய்ரோ பன்னாட்டு அரங்கில் தனது உள்ளக விளையாட்டுகளை நடத்தியது. ஆனால் 2012 முதல் அலெக்சாந்திரியாவில் உள்ள போர்க் எல் அராப் அரங்கில் பெரும்பான்மையான போட்டிகளை நடத்துகிறது. எகிப்து ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. அத்துடன் பிஃபா உலகத் தரவரிசையில் ஒன்பதாவது நிலையிலும் வந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் உலகின் முதல் 10 அணிகளில் இடம்பிடித்த மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். இருந்தாலும், உலக்க்கோப்பை போட்டிகளில் எகிப்து இதுவரை இரண்டு தடவைகளே விளையாடியுள்ளது. (1934, 1990), இவ்விரு தடவைகளிலும் எப்போட்டியிலும் வெற்றியடையவில்லை. 2017 ஆப்பிரிக்கக் கோப்பையில் எகிப்து இறுதிப் போட்டியில் கமரூன் அணியுடன் விளையாடித் தோற்று இரண்டாம் நிலைக்கு வந்தது.[2] இச்சுப்புப் போட்டியின் மூலம் எகிப்து 2017 பிஃபா உலகத் தரவரிசையில் 60 இல் இருந்து 19-ஆம் நிலைக்கு முன்னேறியது. 2017 அக்டோபர் 8 இல் எகிப்து 28 ஆண்டுகளின் பின்னர் 2018 உலகக் கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றது.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia