கமரூன் தேசிய காற்பந்து அணி
![]() கமரூன் தேசிய கால்பந்து அணி (Cameroon national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் கமரூன் நாட்டின் சார்பில் விளையாடும் கால்பந்து அணியாகும். இவர்களின் அடைபெயர்: வெல்லமுடியாத சிங்கங்கள் (பிரெஞ்சு: Les Lions Indomptables). இந்த அணியினை, கமரூன் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. மற்ற எந்த ஆப்பிரிக்க நாடுகளையும் விட அதிகமுறை (7 தடவைகள் - 1982, 1990, 1994, 1998, 2002, 2010 மற்றும் 2014) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கின்றனர். ஆயினும், ஒருதடவை மட்டுமே குழுநிலைக்கு அடுத்தநிலைக்கு முன்னேறியுள்ளனர். இவர்களே, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணியினர்; 1990-ஆம் ஆண்டின் காலிறுதியில் இங்கிலாந்திடம் கூடுதல் ஆட்ட நேரத்தில் தோற்றனர். கமரூன் அணியினர் நான்கு முறை ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை வென்றிருக்கின்றனர். குறிப்புதவிகள்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia