எக்சாடெக்கேன்
எக்சாடெக்கேன் (Hexadecane) என்பது C16H34 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சிடேன் என்றும் அழைக்கப்படும் இந்த ஆல்கேன் ஓர் ஐதரோ கார்பன் ஆகும். 16 கார்பன் அணுக்கள் கொண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டுள்ள இச்சேர்மத்தின் இரு முனைகளிலும் மூன்று ஐதரசன் அணுக்களும் மற்ற 14 கார்பன் அணுக்களுடன் இரண்டு ஐதரசன் அணுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. சிடேன் எண்ணையே சுருக்கமாக சிடேன் என்று அழைக்கின்றனர். டீசல் எரிபொருளின் வெடிக்கும் அளவு சிடேன் என்ற அலகால் அளவிடப்படுகிறது. அழுத்தத்தினால் சிடேன் எளிதாக தீப்பற்றும். இந்த காரணத்தால் இதனுடைய சிடேன் எண் 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் மற்ற எரிபொருள் கலைவகளுக்கு சிடேன் எண் வழங்கப்படுகிறது. வாகன எரிபொருள் திறனை அளவிட உதவும் குறியீடான ஆக்டேன் எண்ணை மிகக் குறைவாகக் (<−30) கொண்டுள்ள எரிபொருள் சிடேனாகும்[3]. இதையும் காண்கமேற்கோள்கள்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia