எப்டாடெக்கேன்
எப்டாடெக்கேன் (Heptadecane) என்பது C17H36 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த ஆல்கேன் ஓர் ஐதரோ கார்பன் ஆகும். கருத்தியலாகச் சாத்தியமுள்ள 24894 கட்டமைப்பு மாற்றியங்களில் ஒன்றாகவும் அல்லது அவற்றின் கலவையாகவும் கருதப்படுகிறது. கிளைகளற்ற நேரியலான மாற்றியம் என்-எப்டாடெக்கேன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் வேதிவாய்ப்பாடு CH3(CH2)15CH3 ஆகும். ஐயுபிஏசி பெயரிடும் முறையில் பொதுவாக இச்சேர்மம் எப்டாடெக்கேன் என்று பெயரிடப்படுகிறது. ஏனென்றால் மற்ற மாற்றியங்கள் சிறிய ஆல்கேன்களின் ஆல்கைல் பதிலீட்டு வடிவங்களாக பெயரிடப்பட்டு நோக்கப்படுகின்றன. கிளைச்சங்கிலி கொண்ட எளிய அடக்கமான மாற்றியமாக டெட்ரா-டெர்ட்-பியூட்டைல்மெத்தேன் கருதப்படுகிறது என்றாலும் இடத்தடங்கல் காரணமாக இதனுடைய இருப்பு சாத்தியமற்றதாக உள்ளது. உண்மையில் இதுவே சாத்தியமில்லாத சிறிய ஆல்கேன் ஆகும்[3]. மேற்கோள்கள்
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia