புரொப்பேன்
புரோப்பேன் (Propane) என்பது C3H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மூன்று கார்பன் அணுக்கள் கொண்ட ஆல்கேன் வகைச் சேர்மமான இது திட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஒரு வாயுவாகக் காணப்படுகிறது. ஆனால் புரோப்பேன் வாயுவை ஒரு நீர்மமாகச் சுருக்கி கொண்டு செல்லமுடியும். இயற்கை வாயுவை தயாரிக்கும் போதும் பெட்ரோலியத்தை சுத்திகரிக்கும் போதும் ஓர் உடன் விளை பொருளாக புரோப்பேன் கிடைக்கிறது. பொதுவாக ஒரு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவில் உள்ள வாயுக் குழுவில் இதுவும் ஒன்றாகும். பியூட்டேன், புரோப்பிலீன், பியூட்டாடையீன், பியூட்டைலீன், ஐசோபியூட்டைலீன் மற்றும் இவற்றின் கலவைகள் உள்ளிட்டவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவில் உள்ள பிற வாயுக்களாகும். வரலாறுபிரெஞ்சு வேதியியலாளர் மார்செலின் பெர்த்திலாட்டு 1857 இல் புரோப்பேனைக் கண்டுபிடித்தார் [1]. பெட்ரோல் அல்லது காசோலினில் உள்ள ஒரு ஆவியாகும் வேதிப்பொருள் என்ற அளவிலேயே வால்ட்டர் ஓ சினெல்லிங் 1910 ஆண்டு இதை அடையாளம் கண்டார். இந்தச் சேர்மம் நீண்ட காலத்திற்கு முன்பே அறியப்பட்டிருந்தாலும் சினெல்லின் வேலை அமெரிக்காவில் உள்ள புரோப்பேன் தொழிலின் தொடக்கமாக அமைந்தது. சுத்திகரிக்கப்படாத காசோலினின் உயர் ஆவியழுத்தம் காரணமாக இந்த எளிய ஐதரோகார்பன்களின் எளிதில் ஆவியாகும் தன்மை பரவலாக அறியப்பட்டிருந்தது. திரவமாக்கப்பட்ட வாயுக்கள் மீதான சினெல்லின் ஆய்வுகளால் ஒரு எஃகு புட்டியில் கொண்டு செல்லப்படும் வாயுவைக் கொண்டு சாதாரணமான ஒரு வீட்டிற்கு மூன்று வாரத்திற்கு விளக்கேற்ற முடியுமென நியூயார்க் டைம்சு இதழ் மார்ச்சு 31 இல் ஓர் அறிக்கை வெளியிட்டது [2]. இந்த நேரத்தில் பிராங்க், பி. பீட்டர்சன், செசுட்டர் கெர் மற்றும் ஆர்தர் கெர் ஆகியோருடன் சினெல்லிங் ஒன்றிணைந்து கூட்டுறவாக இயற்கை பெட்ரோலியத்தைச் சுத்திகரிக்கும் போது திரவ பெட்ரோலியம் வாயுக்களை திரவமாக்குவதற்கான வழிகளை உருவாக்கினார். அவர்கள் அனைவரும் ஒன்றினைந்து புரோப்பேனை வர்த்தக முரையில் விற்பனை செய்த முதலாவது நிறுவனமான அமெரிக்க கெசோல் நிறுவனத்தை நிறுவினார்கள். 1911 ஆம் ஆண்டில் சினெல்லிங் ஒப்பீட்டளவில் தூய புரோப்பேனை உற்பத்தி செய்தார். 1913 மார்ச்சு 25 இல் இவருடைய திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயு தயாரித்தல் செயல்முறைக்கு காப்புரிமை # 1,056,845 என வழங்கப்பட்டது[3]. வாயுக்களைச் சுருக்கி திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவைத் தயாரிக்கும் செயல்முறையை பிராங்க் பீட்டர்சன் உருவாக்கி சூலை 2, 1912 இல் அவரும் காப்புரிமை பெற்றார்[4]. 1920 களில் சா நிறுவனத்தில் திரவ பெட்ரொலியம் வாயு உற்பத்தி அதிகரித்தது, முதலாவது ஆண்டான 1922 ஆம் ஆண்டில் 223,000 அமெரிக்க கேலன்கள் (840 மீ 3) மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 1927 இல் 1 மில்லியன் கேலனாகவும் 1935 இல் இது 56 மில்லியன் காலன்களாகவும் உயர்ந்தது. 1930 களின் முக்கிய தொழில் வளர்ச்சிக்கு இரயில் போக்குவரத்து, எரிவாயு வடித்தல் மற்றும் உள்ளூரில் புட்டிகளை நிரப்பும் ஆலைகளை தொடங்கியது போன்றவை காரணங்களாகும். அறிமுகப்படுத்தியது.1945 இல் பில்லியன் கேலன் அளவுக்குஅமெரிக்காவின் திரவ பெட்ரோலியம் வாயு விற்பனை உயர்ந்தது. 1947 இல் அமெரிக்க வீடுகளில் 62% வீடுகள் இயற்கை எரிவாயு அல்லது புரோப்பேன் எரிபொருளை சமையலுக்காகப் பெற்று தன்னிறைவு அடைந்திருந்தன [3]. 1950 இல் 1,000 புரோப்பேன் எரிபொருள் பேருந்துகள் சிக்காக்கோ நகரில் இயக்கப்பட்டன. 1958 இல் ஆண்டுக்கு 7 பில்லியன் அமெரிக்க கேலன்கள் அளவுக்கு திரவ பெட்ரோலியம் வாயுவின் விற்பனை உயர்ந்தது. 2004 இல் ஆண்டுக்கு 8 முதல் 10 பில்லியன் அமெரிக்க கேலன்கள் அளவுக்கு திரவ பெட்ரோலியம் வாயுவின் விற்பனை மேலும் உயர்ந்தது [5]. புரோப்பேனில் உள்ள புரோப் என்ற வேர்ச்சொல் புரோப்பியானிக் அமிலம் என்ற சேர்மத்திலிருந்து வருவிக்கப்பட்டது ஆகும். மூன்று கார்பன் அணுக்கள் கொண்ட பிற சேர்மங்களுக்கும் இந்த வேர்ச்சொல் பயன்படுத்தப்படுகிறது. கிரேக்கச் சொற்ற்கலான முதல் என்ற பொருள் கொண்ட புரோட்டோசு மற்றும் கொழுப்பு என்ற பொருள் கொண்ட பியோன் என்ற கிரேக்க சொற்களிலிருந்து புரோப்பியோனிக் என்ற சொல் உருவானது[6]. ஆதார மூலங்கள்இரண்டு செயல்முறைகள் புரோப்பேன் உடன் விளை பொருளாகக் கிடைப்பதற்கான மூலமாக இருக்கின்றன. இயற்கை எரிவாயு தயாரிக்கும் செயல்முறை மற்றும் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆகியன இவ்விரு செயல்முறைகளாகும். இயற்கை எரிவாயு தயாரித்தல் செயலாக்க முறையில் வாயுவிலிருந்து பியூட்டேன், புரோப்பேன் மற்றும் பெருமளவு ஈத்தேன் போன்ற வாயுக்கள் நீக்கப்படுகின்றன. பெட்ரோலியம் சுத்திகரிப்பு செயலாக்க முறையில் சிறிதளவு புரோப்பேன் உடன் விளைபொருளாக உருவாகிறது. உடன் விளைபொருளாக மட்டும் தயாரிக்கப்படும் புரோப்பேன் அளவால் தேவைப்படும் புரோப்பேனின் மொத்த அளவுக்கு ஈடுகட்ட முடியவில்லை. 90% புரோப்பேன் உற்பத்தி அமெரிக்காவில் வீட்டுத் தொழிலில் தயாரிக்கப்படுகிறது. 10% புரோப்பேனை அமெரிக்கா கனடா போன்ற நாடுகளிலிருந்து இரயில் வழியாகவும் கடல் வழியாகவும் இறக்குமதி செய்து கொள்கிறது. உற்பத்தி செய்யப்படும் புரோப்பேன் வட அமெரிக்காவில் உப்புக் குகைகளில் சேமித்தும் வைக்கப்படுகிறது. 1940 களில் இக்குகைகள் உருவாக்கப்பட்டு தற்போது இவைகளில் 80,000,000 பீப்பாய்களுக்கு அதிகமான புரோப்பேனை சேமித்து வைக்க முடியும். புரோப்பேன் தேவைப்படும் நேரத்தில் இங்கிருந்து கப்பல், இரயில், லாரிகள் முதலியனவற்றின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது [7]. உயிரிய எரிபொருட்களிலிருந்தும் புரோப்பேனை தயாரிக்க முடியும் [8]. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia