எசு. ஆர். இராதா
எஸ். ஆர். இராதா எனும் செம்பு இராமையா இராதா (S. R. Radha) தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1] 1934-இல் கும்பகோணத்தில் பிறந்தவர்.[2] 1972 அக்டோபர் 17 அன்று அ.தி.மு.க துவக்கப்பட்டபோது அதன் முதவாலாவது உறுப்பினாராக எம்.ஜி.ஆர் பதிவு செய்ய மூத்த உறுப்பினர் வரிசையில் ஆறாவதாக உறுப்பினராக கையொப்பமிட்டவர் எசு. ஆர். இராதா ஆவார். 1977-இல் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] அப்போது சுற்றுலா வாரியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார் என்றாலும் இவரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக ஆக்கினார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் மீன்வளத் துறை அதையடுத்து கைத்தறி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சராகவும், சிலகாலம் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.[4] 1989-இல் அதிமுக சார்பில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். அதிமுகவின் ஜா,ஜெ அணிகளின் இணைப்பிற்கு பின் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில், நடைபெற்ற இடைத்தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.[5][6] பின்னர் 1989-1991-இல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சட்டமன்ற உறுப்பினராக
இறப்புஎஸ். ஆர். இராதா வயது மூப்பின் காரணமாகவும், உடல்நலக் குறைவின் காரணமாகவும் தனது 86-ஆவது வயதில் 2020 துசம்பர் 8 அன்று சென்னை மருத்துவமனையில் காலமானார்.[7] [8][9][10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia