என்னமோ ஏதோ
என்னமோ ஏதோ(Yennamo Yedho) 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ரவி தியாகராஜன் இயக்க, கௌதம் கார்த்திக், நிகேசா படேல் ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கு திரைப்படமான அலா மொத-லை-யிந்தி[1] திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். இத்திரைப்படமானது, ரவி பிரசாத் புரொடக்சன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். கோபி ஜெகதீஸ்வரன் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், விஸ்வரூபம் (2012 திரைப்படம்) புகழ் லால்குடி என் இளையராஜா கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர்.[2] இத்திரைப்படம் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களைச் சந்தித்தது. நடிப்பு
கதைக்களம்ஒரு திருமணத்தில் நாயகன் கௌதமும் (கௌதம் கார்த்திக்), நாயகி நித்தியாவும் (ராகுல் பிரீத் சிங்) சந்தித்துக்கொள்கிறார்கள். இரண்டு பேருமே மணமக்களை வாழ்த்த வரவில்லை. சில மாதங்களுக்கு முன்புவரை கௌதம் காதலித்த பெண்ணுக்கும், நித்தியாவைக் காதலித்து ஏமாற்றியவனுக்கும் நடக்கும் திருமணம் தான் அது. தங்களை விட்டுப் பிரிந்தவரைச் சபிப்பதற்காகத் திருமணத்திற்கு வந்திருக்கும் கௌதமும் நித்யாவும் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். கவுதம் சென்னை வந்த பிறகும் ராகுல் பிரீத் சிங்குடன் நட்பு தொடர்கிறது. அதை காதல் என நம்பி, அவரிடம் சொல்லப் போகிறார் கவுதம். ஆனால் அந்த நேரத்தில்தான் தன் காதலனை அறிமுகப்படுத்துகிறார் ராகுல் பிரீத் சிங். பின்னர் நிகிஷா பட்டீலின் அறிமுகம் கிடைக்க, கவுதம் மனது அவர் மீது காதலாகிறது. ஆனால் காதலுடன் போன ராகுல் ப்ரீத் சிங், தன் மனம் உண்மையில் நாடுவது கவுதமைத்தான் எனப் புரிந்து, அவரைத் தேடி வருகிறார். அங்கே கவுதம் - நிகிஷா காதலில் விழுந்திருப்பதை அறிந்து தன் காதலை சொல்லாமல் போகிறார். ஆனால் கவுதம் - நிகிஷா காதலும் ஒரு காரணத்தால் முறிகிறது. பாதிக்கப்பட்ட இந்த இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு இருவரும் இணைந்தார்களா என்பதுதான் கதை.[3] தயாரிப்புரவி பிரசாத் அவுட்டோர் யூனிட் என்ற தென்னிந்திய அளவில் முன்னோடியான திரைப்படத் தயாரிப்பு சாதனங்கள் வழங்கும் நிறுவனத்தினர் அலா மொத-லை-யிந்தி என்ற திரைப்படத்தை மறுஆக்கம் செய்வதற்கான உரிமையை வாங்கியிருந்தனர். இவர்கள் இத்திரைப்படத்தை ரவி பிரசாத் புரொடெக்சன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க முடிவெடுத்தனர்.[4] தியாகராஜன் என்ற சண்டைப்பயிற்சி இயக்குநரின் மகனும், இயக்குநர் பிரியதர்சனின் உதவியாளருமான ரவி தியாகராஜன் படத்தை இயக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். இயக்குநராக இவருக்கு இது அறிமுகப் படமாகும்.[5] 2013 ஆம் ஆண்டில் மே 23 ஆம் நாளில் படப்பிடிப்பு தொடங்கியது.[6] இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு 27 சூன் 2013 இல் ஐதராபாத்தில் தொடங்கியது.[7] ஒலிவரிஇத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க பாடல் வரிகள் மதன் கார்க்கியால் எழுதப்பட்டுள்ளன.[8]
மாறுபட்ட வரவேற்புஇத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தது. டைம்ஸ் ஆப் இந்தியா ஐந்திற்கு இரண்டு நட்சத்திரங்கள் அளவிற்கே மதிப்பீடு கொடுத்தது. மேலும், அது "இது எழுத்தில் உள்ளபோது ஏதோ உள்ளது போல் உணர்த்தியிருக்கலாம். ஆனால், திரையில் வரும் போது அபத்தமான நகைச்சுவையாகவே ஒருவர் இதைக் கருத முடியும் எனவும், அதன் சீரற்ற தொனியின் காரணமாக, இந்த திரைப்படம் கடுமையாக ஒத்துப்போகாமலும், குவிக்கப்படாமலும் வந்துள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளது.[9] தி இந்து "இத்திரைப்படத்தில் வரும் காதல் காட்சிகளுக்கும் காதல் முறிவுகளுக்கும் முடிவேயில்லாமல் சலிப்பைத் தருகின்றன” என எழுதியுள்ளது.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia