என். வி. இரமணா
நூத்தலபதி வெங்கட ரமணா (Nuthalapati Venkata Ramana) (பிறப்பு: 27 ஆகஸ்டு 1957) இந்திய உச்ச நீதிமன்றத்தின் 48வது இந்தியத் தலைமை நீதிபதியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.[1][2] இவரது பதவிக்காலம் 24 ஏப்ரல் 2021 முதல் துவங்குகிறது. முன்னர் என். வி. ரமணா 17 பிப்ரவரி 2014 முதல் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதியரசராகவும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதியரசராகவும் பணியாற்றியவர்.[3]மேலும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றிவர்.[4] இந்தியத் தலைமை நீதிபதியான எஸ். ஏ. பாப்டேவின் பதவி காலம் வரும் 23 ஏப்ரல் 2021 அன்று முடிவடைகிறது. அவரத் பணியிடத்தில் இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் என். வி. இரமணா 24 ஏப்ரல் 2021 அன்று இந்தியத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.[5] நீதியரசர் இரமணா 25 ஆகஸ்டு 2022-இல் பணி ஓய்வு பெறுகிறார்.[6][7] வரலாறுஇவர் ஆந்திரப் பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் 27 ஆகஸ்டு 1957-அன்று பிறந்தார்.[8] இளநிலை அறிவியல் மற்றும் இளநிலை சட்டப் படிப்பு முடித்த இவர் 10 பிப்ரவரி 1983 அன்று வழக்குரைஞர் பணியைத் தொடங்கினார். மேலும் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம், இந்திய உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர், பல அரசு முகமைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட வழக்குரைஞர்கள் பட்டியலில் இடம் பெற்றவர். சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச முதல்வராக இருந்தபோது அம்மாநிலத்தின் அரசக் கூடுதல் தலைமை வழக்கறிஞராக இருந்தார். 27 சூன் 2000 அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அதே நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாக 2013-ஆம் ஆண்டில் ஓரிரு மாதங்கள் பணியாற்றினார். பிறகு தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்றார். 20 பிப்ரவரி 2017 அன்று இவர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[9] சர்ச்சைகள்இவர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது, ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, என்.வி.ரமணாவுக்கு எதிராக அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். கடிதத்தில் என். வி. இரமணா ஆந்திரப் பிரதேச மாநில நிர்வாக விவகாரங்களில் தலையிடுவதாகவும், அவருக்கும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையிலான நெருக்கம் இருப்பதாகவும், ஆந்திர உயர்நீதிமன்றத்தின் அமர்வுகளில், நீதிபதிகளின் ரோஸ்டர்களில் அவர் தலையிடுவதாகவும், தெலுங்கு தேசம் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில வழக்குகள் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு ஒதுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.[10] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia