எஸ். ஏ. பாப்டே
எஸ். ஏ. பாப்டே (பிறப்பு: ஏப்ரல் 24, 1956) இந்திய உச்சநீதிமன்றத்தின் 47 வது முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். குடும்பம்எஸ்.ஏ.பாப்டே எனப்படும் சரத் அர்விந்த் பாப்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1955-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி பிறந்தவர். இவரின் குடும்பம் வழக்கறிஞர்களால் நிரம்பியது. பாப்டேயின் தந்தை அர்விந்த் பாப்டே மகாராஷ்டிர மாநில அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தவர். மறைந்த, இவரின் அண்ணன் வினோத் அர்விந்த் பாப்டே, உச்ச நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். இவர், நான்காம் தலைமுறை வழக்கறிஞர். ஆனாலும், குடும்பத்தில் இவர்தான் முதல் நீதிபதி. நீதிபதி2000-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ.பாப்டே, 2012-ம் ஆண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், பாபர் மசூதி – ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்தவர். இதனையும் காண்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia