என் ராசாவின் மனசிலே
என் ராசாவின் மனசிலே, கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் 1991-ம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்கிரண், மீனா, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ராஜ்கிரண் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 13 ஏப்ரல் 1991 அன்று வெளியான இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். தெலுங்கில் மொரத்தொடு நா மொகுடு என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தின் மறுவாக்கத்தில் ராஜசேகர், மீனா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3][4][5] பாடல்கள்
இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 1991-இல் வெளியான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களை இளையராஜா, பொன்னடியான், உஷா, பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[6][7]
விருதுகள்1991 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது இரண்டாம் பரிசு சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia