வீரத்தாலாட்டு
வீரத்தாலாட்டு (Veera Thalattu) என்பது 1998 ஆம் ஆண்டின் இந்திய தமிழ்- மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதை கஸ்தூரி ராஜா எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் முரளி, வினிதா , குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், ராஜ்கிரண், ராதிகா , லட்சுமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படத்திற்கான இசையை இளையராஜா மேற்கொண்டார். இப்படம் 1998 ஏப்ரலில் வெளியிடப்பட்டது.[1] நடிகர்கள்
தயாரிப்புபடமானது தயாரிப்பு பணியின்போது தாமதங்களைக் கண்டது. படத்தை முடிக்க ஒன்றரை ஆண்டுகள் ஆனது.[2] பின்னணி இசைஇளையராஜா இசையமைக்க அனைத்து பாடல்களையும் கஸ்தூரி ராஜா எழுதியுள்ளார்.[3]
வெளியீடுஇந்த படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. Indolink.com இணைய தளத்தில் ஒரு விமர்சகர் இது "புதிய போத்தலில் பழைய ஒயின்" என்றும், இயக்குநர் "நாயகனின் தந்தையின்" மரணத்திற்குப் பழிவாங்கும் பழைய கதைக்கு ஒரு புதிய தோற்றத்தை கொடுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.[4] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia