எம். எஸ். ஆனந்தன்
எம். எஸ். ஆனந்தன் (M. S. Anandan, 21 ஏப்ரல் 1933 – 24 சூன் 2016), எம். எஸ். ஆனந்தா எனப் பிரபலமாக அழைக்கப்படுபவர், இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும்,[1] ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளரும் ஆவார்.[2] பல புகழ்பெற்ற சிங்களத் திரைப்படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். வாழ்க்கைக் குறிப்புயாழ்ப்பாண மாவட்டம், கொடிகாமத்தில் பிறந்த ஆனந்தனின் இயற்பெயர் மார்க்கண்டு செல்வானந்தன். இவர் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர். பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.[3] எம். எஸ். ஆனந்தன் திரைப்படத் தயாரிப்பாளர் வயலெட்டைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள். மூத்தவர் சியாமா ஆனந்தா சிங்களத் திரைப்படங்களில் பிரபலமான ஒரு நடிகை ஆவார். 1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் ராஜகிரியவில் 'ஆனந்தா சினிமா' என்ற பெயரில் படமாளிகை ஒன்றைக் கட்டினார். 1958 இனக்கலவரத்தில் இப்படமாளிகை எரிக்கப்பட்டுவிட்டது.[3] எம்.எஸ். ஆனந்தன் குடும்பத்தாருடன் சிலகாலம் கனடாவில் வாழ்ந்து, பின்னர் இலங்கை திரும்பி விட்டார்.[3] திரையுலகப் பணிதொடக்கத்தில் எஸ். எம். நாயகத்தின் கந்தானை கலையகத்தில் உதவி ஒளிப்பதிவாளராகத் தனது கலையுலகப் பணியை ஆரம்பித்தார். பின்னர் தமிழ்நாட்டில் “நெப்டியூன்” கலையகத்தில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றுத் திரும்பியவர் சிலோன் ஸ்டூடியோவில் ஒளிப்பதிவாளராகப் பொறுப்பேற்றார்.[3] 1959 இல் 'கெகெனு கெத்தா' என்ற சிங்களத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர் 'ரன்முத்து துவ' என்ற இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது வண்ணத் திரைப்படத்திற்கு உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர் 'நிதானய', 'மடோல் துவா', 'கெகெனு லமாய்', 'அக்கர பகா' போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தார்.[4] பிரபல இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கிய பல படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்தார். இவர் ஒளிப்பதிவு செய்த 'கொலு ஹதவத்த' (ஊமை உள்ளம்), 'அக்கற பஹ' (ஐந்து பரப்பு), 'நிதானய' (புதையல்), 'மடொல்தூவ' (மடோல்தீவு) போன்ற படங்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கின.[3] 1964 ஆம் ஆண்டில் 'சித்தக்க மகிம' (உள்ளத்தின் பெறுமதி) என்ற சிங்களத் திரைப்படத்தை முதன் முதலாக இயக்கினார். 'ப்ரசவன்ன' என்ற திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினார். இத்திரைப்படத்தில் இவரது மகள் சியாம இரட்டை வேடங்களில் தோன்றி நடித்தார்.[5] இவர் இயக்கிய இன்னுமொரு படமான 'ஹந்தபான' (நிலாவொளி) அதிக நாட்கள் ஓடியது. இவரது மகள் சியாமா நடித்த 'மகே நங்கி சியாமா', 'சண்டி சியாமா', 'ஹலோ சியாமா', 'மம பய னெகே சியாமா' ஆகிய படங்களை இயக்கினார். இவரின் தயாரிப்பில் 1965 இல் வெளிவந்த சத்த பனகா' என்ற திரைப்படம் பெரும் வசூலைப் பெற்றது.[6] சியாமாவின் மகளான மந்தாராவைக் கதாநாயகியாக வைத்து 'மம பய நே' (எனக்கு பயமில்லை) என்ற படத்தை உருவாக்கினார். இப்படத்தின் ஆரம்பப் பகுதி இலங்கையிலும் பின்பகுதியை கனடாவிலும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.[3] திரைப்படங்கள்இயக்கிய படங்கள்
மறைவுஎம். எஸ். ஆனந்தன் 2016 சூன் 24 இரவு தனது 83 ஆவது அகவையில் காலமானார்.[8][9][10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia