எர்பியம் நைட்ரைடு கருப்பு நிறத்தில் தூளாக உருவாகிறது. வேதியியல் ரீதியாக, இச்சேர்மம் அதிக வினைத்திறன் கொண்டதாகவும் காற்றில் எளிதில் ஆக்சிசனேற்றமடையக் கூடியதாகவும் காணப்படுகிறது. அதிக ஈரப்பதம் எர்பியம் நைட்ரைடை நீராற்பகுப்பு அடையச் செய்கிறது. இந்நீராற் பகுப்பு வினையில் Er(OH)3 சேர்மமும் அம்மோனியாவும் உருவாகின்றன.[2]
எர்பியம் நைட்ரைடு சேர்மத்திற்கு ஒளியியல் பண்புகளும் காந்தப் பண்புகளும் உள்ளன.[3]
பயன்கள்
எர்பியம் நைட்ரைடு சேர்மம் III-நைட்ரைடு குறைக்கடத்திகளில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒளிமின்னணு மற்றும் சுழல் மின்னணு கருவிகள் உருவாக்கத்தில் இக்கலப்பு பயனாகிறது.[4]
↑Al Atabi, Hayder A.; Al Auda, Zahraa F.; Padavala, B.; Craig, M.; Hohn, K.; Edgar, James H. (5 July 2018). "Sublimation Growth and Characterization of Erbium Nitride Crystals". Crystal Growth & Design18 (7): 3762–3766. doi:10.1021/acs.cgd.7b01543.