எல்மாந்து ஆறு
எல்மாந்து நதி (Helmand River) எல்மாண்ட், கிர்மாண்ட் என்றும் உச்சரிக்கப்படும் இது ஆப்கானித்தானின் மிக நீளமான ஆறும், வடிநிலமும் ஆகும். [1] இது வர்தகு மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்து குஃசு மலைகளின் சங்லாக் மலைத்தொடரில் உருவாகிறது. அங்கு|காபூல் ஆற்றின் நீர்நிலையிலிருந்து உனாய் கணவாய் மூலம் பிரிக்கப்படுகிறது. இது ஆப்கானித்தானுக்கும் ஈரானுக்கும் இடையிலான எல்லையில் உள்ள ஹாமூன் ஏரியில் கலக்கிறது. எல்மாந்து மற்றும் அர்கந்தாப் பள்ளத்தாக்கு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் இந்த ஆறு, நீர்ப்பாசனத்திற்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் தாது உப்புகளின் குவிப்பு பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் அதன் பயனைக் குறைத்துள்ளது. ஆனாலும் அதன் நீளத்தின் பெரும்பகுதியில் உப்பு இல்லாமல் உள்ளது. [2] இதன் நீர் ஆப்கானித்தானில் உள்ள விவசாயிகளுக்கு இன்றியமையாதது. ஆனால் இது ஹாமூன் ஏரியில் நீரளிக்கிறது. மேலும், ஈரானின் தென்கிழக்கு சிசுத்தான் மற்றும் பலுச்சித்தான் மாகாணத்தில் உள்ள விவசாயிகளுக்கும் முக்கியமானது. ஆற்றின் கஜாக்கி அணை உட்பட ஆப்கானித்தானின் சில ஆறுகளில் பல நீர்மின் அணைகள் செயற்கை நீர்த்தேக்கங்களை உருவாக்கியுள்ளன. அர்கந்தாப் ஆறு இதன் முக்கிய துணை நதியாகும். (31°27′N 64°23′E / 31.450°N 64.383°E ), காந்தாரத்துக்கு வடக்கே ஒரு பெரிய அணையும் உள்ளது. வரலாறுசரத்துஸ்திரர்களின் புனித நூலான அவெத்தாவில் ( ஃபர்கார்ட் 1:13) ஆரிய நிலமான ஏதுமாந்து என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இப்போது ஆப்கானித்தானில் உள்ள பகுதிகளில் சரதுச நம்பிக்கையின் ஆரம்ப மையங்களில் ஒன்றாகும். இருப்பினும், கிமு முதல் மில்லினியத்தின் பிற்பகுதியிலும், கிபி முதல் மில்லினியத்தின் முற்பகுதியிலும், எல்மாந்து மற்றும் காபூல் பள்ளத்தாக்குகளில் இந்துக்கள் மற்றும் பௌத்தர்களின் சமூகங்களின் ஆதிக்கம், பார்த்தியர்கள் அதை "வெள்ளை-இந்தியா" என்று குறிப்பிட வழிவகுத்தது. [3] [4] [5] [6] சான்றுகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia