பார்த்தியப் பேரரசு (Parthian Empire) (ஆட்சிக் காலம்; கி மு – 247 - கி பி 224), என்பதை அர்சசிது பேரரசு (Arsacid Empire) என்றும் அழைப்பர். பண்டைய ஈரானின் பார்த்திய மொழி பேசும் மக்கள், ஈரானிலும், ஈராக்கிலும் அரசியல் மற்றும் நாகரீகத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியவர்கள்.[6]
கிரேக்க செலுசிட் பேரரசின் பண்பாடும், நாகரீகமும் பரவிய பார்த்தியப் பேரரசில், கிரேக்க பண்பாட்டின் தாக்கத்தால் மறுமலர்ச்சி பெற்ற பாரசீக பண்பாடு மற்றும் நாகரீகத்தை மக்கள் விரும்பி ஏற்றனர்.
கிரேக்கர்களை பின்பற்றி பார்த்தியப் பேரரசர்கள் தங்கள் உருவம் பதித்த நாணயங்களை வெளியிட்டனர்.
வெண் களிமண்னால் மனிதத் தலை வடிவில் செய்யப்பட்ட நீர் வைக்கும் பாத்திரம்; காலம்- கி மு 1 - 2-ஆம் நூற்றாண்டு
சமயங்கள்
பல்வேறு மொழி, பண்பாடு, நாகரீகங்கள் கொண்ட பார்த்தியப் பேரரசில் பல தெய்வ வழிபாடுகள் கொண்ட கிரேக்க சமயங்களும்; சரத்துஸ்திர சமயம், யூத சமயம், மானி சமயம், பௌத்தம் மற்றும் பாபிலோனிய சமயங்கள் மக்கள் பின்பற்றினர்.
கலை மற்றும் இலக்கியம்
பண்டைய ஹாத்ரா, தற்கால ஈராக், கட்டிய ஆண்டு; கி பி 50
பார்த்திய கலைகள், பிரதேசம் மற்றும் வரலாறு வாரியாக பாரசீகம், மெசபடோமியா மற்றும் பாத்தியன் மொசபடோமிய என மூன்று வகையான கலைகள் கொண்டது.
பழைய ஏற்பாட்டில் எஸ்தரின் நூலில் காணப்படும் ஒர் சுவர் சித்திரக் காட்சி; காலம் கி பி 245
பார்த்தியர்கள் ஈரானிய மற்றும் கிரேக்க கட்டிடக் கலை நயத்துடன், வளைவுகளுடன் கூடிய பெரும் கட்டிடங்கள் மற்றும் சிற்பங்களை வடித்தனர்.
மொழி
பார்த்தியப் பேரர்சில் அலுவல் மொழியாக கிரேக்க மொழியும்; பேச்சு மொழியாக பழைய அரமேய மொழியும், உள்ளூர் பார்த்திய மொழி, மத்திய கால பாரசீக மொழியும் விளங்கியது.
வீழ்ச்சி
சாசானியர் வம்சத்தின் முதலாம் அர்தசிர், கி பி 224-இல் பார்த்தியப் பேரரசின் இறுதி மன்னர் நான்காம் அர்தபனாஸை வென்றதன் மூலம் பார்த்தியப் பேரரசு வீழ்ச்சி கண்டது.
↑Brosius, Maria (2006). The Persians. Routledge. p. 125. ISBN978-0-203-06815-1. The Parthians and the peoples of the Parthian empire were polytheistic. Each ethnic group, each city, and each land or kingdom was able to adhere to its own gods, their respective cults and religious rituals. In Babylon the city-god Marduk continued to be the main deity alongside the goddesses Ishtar and Nanai, while Hatra's main god, the sun-god Shamash, was revered alongside a multiplicity of other gods.
Parthia.com (a website featuring the history, geography, coins, arts and culture of ancient Parthia, including a bibliographic list of scholarly sources)