எஸ். எம். ஸ்ரீநாகேஷ்
இராணுவத் தளபதி சத்யவந்த் மல்லன்னா ஸ்ரீநாகேஷ் (Satyawant Mallanna Shrinagesh) (சத்யவந்த் ஸ்ரீநாகுலே மல்லன்னா என்றும் அழைக்கப்படுகிறார்) (11 மே 1903 - 27 டிசம்பர் 1977) ஒரு இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் 14 மே 1955 முதல் 7 மே 1957 வரை இந்தியத் தரைப்படையில் 3 வது இராணுவத் தளபதியாக பணியாற்றினார். [1] [2] [3] ஓய்வுக்குப் பிறகு இவர் 14 அக்டோபர் 1959 முதல் 12 நவம்பர் 1960 வரையிலும், மீண்டும் 13 ஜனவரி 1961 முதல் 7 செப்டம்பர் 1962 வரையிலும் அசாம் ஆளுநராகப் பணியாற்றினார். 8 செப்டம்பர் 1962 முதல் 4 மே 1964 வரை ஆந்திரப் பிரதேச ஆளுநராகவும், 4 மே 1964 முதல் ஏப்ரல் 2, 1965 வரை மைசூர் ஆளுநராகவும் இருந்தார். 1957 முதல் 1959 வரை ஐதராபாத் இராச்சியத்தில் ஐதராபாத்தில் இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். சொந்த வாழ்க்கை1934 இல், ஸ்ரீநாகேஷ், ராஜ்குமாரி கோச்சார் என்பவரை மணந்தார் . [4] [5] இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் இருந்தனர். சதீஷ் என்ற இவரது ஒரு மகன் இந்திய ராணுவத்தில் சேர்ந்து மேஜராக ஓய்வு பெற்றார். [4] இறப்பு1950 களின் பிற்பகுதியில் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட [6] ஸ்ரீநாகேஷ் 27 டிசம்பர் 1977 அன்று காலை ராணுவ மருத்துவமனையில் இறந்தார்.[7] [8] மேலும் படிக்க
சான்றுகள்
வெளி இணைப்புகள்
குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia