அசாம் ஆளுநர்களின் பட்டியல்
![]() அசாம் ஆளுநர்களின் பட்டியல், அசாம் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் குவகாத்தியில் உள்ள ராஜ்பவன் (அசாம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது லட்சுமன் ஆச்சார்யா என்பவர் ஆளுநராக உள்ளார்.[1] ஆக்கிரமிக்கப்பட்ட அசாம் பிரித்தானிய இராணுவத் தளபதிகள் (1824-26)1824 ஆம் ஆண்டில், பிரித்தானிய படைகள் அசாமை ஆக்கிரமித்தன, இது அரசியல் ரீதியாக ஒருபோதும் இந்தியாவின் அல்லது பர்மாவின் பகுதியாக இல்லை.
அசாம் பிரித்தானிய அரசியல் முகவர்கள் (1826–28)பிப்ரவரி 24, 1826இல், யண்டபூ ஒப்பந்தம் அசாமின் சில பகுதிகளை, பர்மாவிலிருந்து பிரிட்டனுக்கு வழங்கியது.
அசாம் ஆணையர்கள் (1828–74)1828 ஆம் ஆண்டில், மேற்கு அசாம் வங்காள மாகாணத்தில் இணைக்கப்பட்டது, அதன்பின்னர் 1833 ஆம் ஆண்டில் அசாமின் எஞ்சிய பகுதிகளும் இணைக்கப்பட்டன. அசாமின் ஒரு ஆணையாளர் நியமிக்கப்பட்டார், இவர் வங்காள ஆளுநருக்கு அடிபணிந்தார்.
அசாம் தலைமை ஆணையர்கள் (1874-1905)1874 ஆம் ஆண்டில், அசாம் வங்காள அதிபரிடமிருந்து பிரிக்கப்பட்டது.
கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் துணைநிலை ஆளுநர்கள் (1905–12)1905 ஆம் ஆண்டில், வங்காளம் பிரிக்கப்பட்டது மற்றும் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகியவை துணைநிலை ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டன.
அசாம் தலைமை ஆணையர்கள் (1912–21)1912 ஆம் ஆண்டில், கிழக்கு வங்காளம் மீண்டும் வங்காளத்துடன் இணைக்கப்பட்டது, அசாம் மாகாணம் மீண்டும் ஒரு தலைமை ஆணையரால் ஆளப்பட்டது.
அசாம் ஆளுநர்கள் (1921–47)1921 ஆம் ஆண்டில், தலைமை ஆணையர் ஆளுநராக மேம்படுத்தப்பட்டார்.
அசாம் ஆளுநர்கள் (1947 முதல்)இந்திய விடுதலைக்குப்பின் அசாம் ஆளுநர்கள், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia