எஸ். எஸ். காலனி, மதுரை
எஸ்.எஸ். காலனி என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில்,[1][2][3][4] 9°55′19.6″N 78°05′43.8″E / 9.922111°N 78.095500°E (அதாவது, 9.922100°N, 78.095500°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 162 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், அரசரடி, தத்தனேரி, காளவாசல், கோச்சடை, பழங்காநத்தம், சிம்மக்கல், யானைக்கல் ஆகியவை எஸ்.எஸ். காலனி பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். எஸ்.எஸ். காலனி பகுதியிலிருந்து மதுரை - ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சுமார் 3.5 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. இங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில் மதுரை - பெரியார் பேருந்து நிலையம் மற்றும் சுமார் 9.5 கி.மீ. தொலைவில் மதுரை எம்.ஜி.ஆர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகியவை உள்ளன. மேலும், எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலேயே அமைந்திருக்கிறது. எஸ்.எஸ். காலனி பகுதியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அவனியாபுரம் பகுதியில் மதுரை வானூர்தி நிலையம் சிறப்புற அமைந்துள்ளது. எஸ்.எஸ். காலனி பகுதியானது, மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[5] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆவார். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia