மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம், (Madurai Junction railway station, நிலையக் குறியீடு:MDU) தென்னிந்தியாவின், முக்கியமான மற்றும் பிரபலமான தொடருந்து சந்திப்புகளுள் ஒன்றான இது, தமிழகத்தில், மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வே, தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான மதுரை மண்டலத்தின் தலைமையகமாக விளங்குகிறது. இந்திய இரயில்வேயின் அதிகபட்ச தகுதியான A1 தரச் சான்றிதழோடு, இந்தியாவின் முதல் நூறு முன்பதிவு மையங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.
சிறப்பம்சம்
தமிழரின் கலாச்சாரத்தையும், புதிய தொழில் நுட்பத்திற்கு ஈடாக மதுரை சந்திப்பின் நுழைவாயில், சில ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றியமைக்கப்பட்டது. தென்னக இரயில்வேயில், சென்னை சென்டரலுக்கு அடுத்ததாக மதுரை சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.[சான்று தேவை]
மேலும்:
மின் ஏணி.
குளிர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர்.
பொருட்களை சோதிக்கும் எந்திரம்
கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
24 மணி நேர ஏடிஎம் வசதி (பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி)
இந்தியன் வங்கியின் இணைய முன்பதிவு முறை
உயர்தர உணவகங்கள் (சைவம், அசைவம்)
குளிரூட்டப்பட்ட பயணிகள் ஓய்வறை (முதல் வகுப்பு பயணியருக்கு)
கழிவறையுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பயணிகள் கட்டண ஓய்வறை (பிற வகுப்பு பயணியருக்கு)
பல்நோக்கு வணிக வளாகம்
எளிதில் சென்றடையக்கூடிய வாடகையுந்து, ஆட்டோ நிறுத்தம்
உடைமை பாதுகாப்பு அறை
ஊனமுற்றோர், முதியோருக்கான இலவச மின்கல ஊர்தி (சாமான்களுக்கு அனுமதியில்லை)
பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி
இந்திய இரயில்வேயின் 2011 பட்ஜெட் தாக்கலில், அருப்புக்கோட்டை வழியாக மதுரை - தூத்துக்குடி இடையேயான வர்த்தக இருப்புப் பாதையின் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[3]
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [4][5][6][7][8]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, மதுரை சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 348 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [9][10][11][12][13][14][15]
மதுரையிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்
எண்.
நோக்குமிடம்
வழித்தடம்
இருப்புப் பாதையின் வகை
மின்மயம்
ஒருவழி/ இருவழி
குறிப்பு
1
சென்னை எழும்பூர்
திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு