ஆரப்பாளையம் (மதுரை)
ஆரப்பாளையம் (Arappalayam அல்லது Arapalayam)[1] என்பது தமிழ் நாட்டின் மதுரை நகரத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதி வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இது மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) சார்ந்தது.[2] இதன் அஞ்சல் குறியீடு 625016. ஆற்றின் கரையில் அமைந்துள்ள பகுதி என்பதால் இப்பகுதிக்கு ஆறு, பாளையம் ஆகிய இரண்டு சொற்களையும் சேர்த்து ஆற்றுப்பாளையம் எனப் பெயரிடப்பட்டுப் பின் ஆரப்பாளையம் என மருவி இருக்கலாம் என்பது செவிவழிச் செய்தி. மதுரை இரயில்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவிலும், மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. பருத்தி ஆலை மதுரா கோட்ஸ் இப்பகுதியில் அமைந்துள்ளது.[3] தெருக்களும் பகுதிகளும்ஆரப்பாளையம் மெயின் ரோடு, மேலப் பொன்னகரம் (10 தெருக்கள்), பொன்னகரம் பிராட்வே, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கிருஷ்ணாபாளையம் தெருக்கள், மோதிலால் தெருக்கள், அழகரடி தெருக்கள், மெய்யப்பன் தெரு, ஹார்வி நகர், சகாயமாதா தெரு, ஏஏ ரோடு, டிடி ரோடு, ஜேஜே ரோடு , புட்டுத்தோப்பு, கரிமேடு, மஞ்சள் மேடு, கோமாஸ் பாளையம், ஞானஒளிபுரம், ஹார்வி நகர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகியவை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த தெருக்களும் பகுதிகளுமாகும். வழிபாட்டுத் தலங்கள்இந்துக் கோவில்கள்- (சிவனின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான பிட்டுக்கு மண் சுமந்தது என்னும் திருவிளையாடல் நடந்த வரலாற்றுச் சிறப்புடையது இக்கோவில்).
- இக்கோவிலின் முதன்மைக் கடவுளான பெருமாளின் சிலை வைகை ஆற்றில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசால் போக்குவரத்துக்கும் பொதுமக்களின் நடமாட்டத்துக்கும் இடைஞ்சலாக இருப்பதாக முடிவெடுக்கப்பட்டதால், தற்பொழுது இச்சிலை மேலப் பொன்னகரம் மெயின் ரோட்டிலுள்ள கிருஷ்ணன் கோவிலில் (ஆனந்த் மெமோரியல் பள்ளிக்கு எதிரேயுள்ள) வைக்கப்பட்டுள்ளது.
கிறித்துவ தேவாலயங்கள்
மசூதிகள்டிடி ரோடு, கரிமேடு-இங்கு இசுலாமியர்களின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. கல்வி நிறுவனங்கள்
பேருந்து நிலையம்இங்கு அமைந்துள்ள பேருந்து நிலையம் மதுரை நகரில் அமைந்துள்ள முக்கியப் பேருந்து நிலையங்களுள் ஒன்றாகும். இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற முக்கிய ஊர்களுக்கும், இந்நகரங்களைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மாவட்டங்களிலுள்ள பிற ஊர்களுக்கும் செல்லும் புறநகர்ப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருமங்கலம் பேருந்து நிலையம், மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வேறு சில பகுதிகளுக்கும் இங்கிருந்து 24 மணி நேரமும் நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திரையரங்குகள்இங்கு அமைந்துள்ள திரையரங்குகள்:
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia