எஸ். தங்கராசு

எஸ். தங்கராசு
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1984–1989
முன்னையவர்கே. பி. எஸ். மணி
பின்னவர்அ. அசோக்ராஜ்
தொகுதிபெரம்பலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-09-05)5 செப்டம்பர் 1949
கொளத்தூர், பெரம்பலூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
துணைவர்இந்திராணி
பிள்ளைகள்மணிவண்ணன்
மாரிசரத்
சுபலட்சுமி
பெற்றோர்சுப்பிரமணியன்
மாரியம்மாள்

எஸ். தங்கராசு (S. Thangarasu; 5 செப்டம்பர் 1949 – 6 சூன் 1994) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து 1984 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக, பெரம்பலூர் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இளமையும் கல்வியும்

தங்கராசு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கொளத்தூரில் 5 செப்டம்பர் 1949ஆம் ஆண்டு சுப்ரமணியம் என்பவருக்கும் மரியாயிக்கும் மகனாக பிறந்தார். பள்ளிக் கல்வியை அரியலூரில் முடித்தப் பின்னர் கல்லூரிக் கல்வியினை தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் பயின்றார். இவர் இளம் அறிவியலில் இயற்பியல் படித்து இறுதி தேர்வினை எழுதிய நிலையில், தேர்வு முடிவுகள் வரும் முன்பே தமிழக வேளாண்மை துறை அறந்தாங்கி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தார்.

அரசியல் வாழ்க்கை

மாணவ பருவம் முதலே அரசியலில் ஈடுபட்டு வந்த தங்கராசு, 1980இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பினை இழந்தார். இதன் பின்னர் 1984இல் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மேற்கோள்கள்

  1. "Biographical Sketch Member of Parliament 8th Lok Sabha". Retrieved 26 July 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya