அறந்தாங்கி
அறந்தாங்கி (Aranthangi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும்.[4] அறந்தாங்கி ஒரு செட்டிநாடு பகுதி ஆகும். அறந்தாங்கி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பெயர்க்காரணம்அறந்தாங்கி – பாண்டிய, சோழ அரசுகளின் எல்லையில் இருந்த ஊர் இவ்வூரின் சங்ககால பெயர் மிழலைகூற்றம், இங்கு கோட்டைகள் கிடையாது நாட்டைக் குறிக்கும் எல்லையாக பெரிய அரண் போன்ற சுவர்கள் கட்டப்பட்டன, அதன் சிதிலங்கள் இப்போதும் அங்கே காணக்கிடைக்கிறது. அரண்+தாங்கி என்று அரண்தாங்கி என்று அழைக்கப்பட்ட ஊர் மருவி இப்போது அறந்தாங்கி என்றாகிவிட்டது. அறந்தாங்கி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அறந்தாங்கி நகராட்சியின் மக்கள்தொகை 40,814 ஆகும். மக்கள்தொகையில் 20,101 ஆண்களும், 20,713 பெண்களும் உள்ளனர். 10,130 குடும்பங்களும், 27 வார்டுகளும் கொண்ட அறந்தாங்கி நகராட்சியின் எழுத்தறிவு 90.59% ஆகவுள்ளது. பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4340 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 74.52%, இசுலாமியர்கள் 22.01%, கிறித்தவர்கள் 3.42% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[5] பள்ளிகள்
போன்ற பள்ளிகள் மட்டுமே 1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல் பட்டு வருகின்றன அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இன்று மிகுந்து காணப்படுகின்றன. தனியார் பள்ளிகளும் நிறைந்து காணப்படுகிறான அறந்தாங்கியில் கலைக் கல்லூரிகளும் ஐடிஐ கல்லூரிகளும் அறந்தாங்கியில் அருகாமையிலேயே உள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia