ஏனாத்தூர்ஏனாத்தூர் (Enathur) தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள ஓர் சிற்றூர் ஆகும். இங்கு காஞ்சி சங்கர மடத்தின் மேற்கல்விகளுக்கான சங்கரா பல்கலைக்கழகம் அமைந்தபிறகு பரவலாக அறியப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வாயிலில் 60 அடி உயரமுள்ள ஆதி சங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் அரிய ஓலைச்சுவடிகள் சேமிக்கப்பட்டிருப்பதால் பல அறிஞர்கள் இங்கு ஆய்வுக்காக வருகின்றனர். இந்து சமய பக்தர்களும் இங்கு வருகை புரிகின்றனர்[1]. 2004இல் மீனாட்சி பல்கலைக்கழகத்தின் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழக வளாகம் நிறுவப்பட்டுள்ளது.[2] இங்கு புதிய குடியிருப்புகள் விரைவாக கட்டப்பட்டு வருகின்றன. பண்டைக்கால வேத பாட சாலை கட்டிடங்கள் தற்போதும் இப்பல்கலைக்கழக்த்தின் பின் காணப்படுகின்றன. இதனருகே ஒரு ஆகுடிலும் உள்ளது. மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia