ஐங்கரன் (திரைப்படம்)
ஐங்கரன் (Ayngaran) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். காமன் மேன் பிரசண்ட்ஸ் தயாரித்த இப்படத்தை இரவி அரசு எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், அரீஷ் பேரடி உள்ளிட்ட துணை நடிகர்களுடன் ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மகிமா நம்பியார் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் படம் 5 மே 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் போதுமான திரைகள் கிடைக்காததால் வெளியீடு மே 12 க்கு ஒத்திவைக்கப்பட்டது.[1][2] மூன்று ஆண்டு தாமதத்திற்குப் பிறகு படம் வெளியானது.[3][4] நடிகர்கள்
இசைஇப்படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்தார். இதன் பாடல் தொகுப்பில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன.[5]
வெளியீடுவரவேற்புஇப்படம் கலவையான விமர்சனங்களுடன் ஓடியது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா "மொத்தத்தில், ஐங்கரன் நிச்சயமாக ஒரு தகுதியான பொருளைப் பற்றி பேசும் ஒரு படம், ஆனால் அதை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்" என்று எழுதியது.[6] சினிமா எக்ஸ்பிரஸ், "எளிய கண்டுபிடிப்பாளர்கள் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டத்தைப் பற்றி பேசும் இந்த நல்ல எண்ணம் கொண்ட திரைப்படத்தை தோதான திருப்பங்களும் போதாமையான எழுத்துகளும் பாதிக்கின்றன" என்று கருத்து தெரிவித்தது.[7][8] பிஹைண்ட்வுட்ஸ் படத்தை 2.75/5 என மதிப்பிட்டது, "ஐங்கரன் சிறப்பான நடிப்பு மற்றும் பாத்திரங்களைக் கொண்ட படம், மூன்று துணைக்கதைகளுக்குப் பதிலாக, படத்தை ஒற்றைப் போக்கில் கொண்டு சென்றிருந்தால், இன்னும் நெகிழ்வான, இறுக்கமான திரைப்படத்தைப் பெற்றிருப்போம். ஆயினும்கூட, இறுதியில் தரும் செய்தியானது மிகவும் நேர்மையானது. ஒட்டுமொத்தமாக ஐங்கரன் நல்ல நடிப்புடன் முக்கியமான செய்தியை வழங்குகிறான்." [9] குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia