பனாரசு இந்து பல்கலைக்கழகம்
காசி இந்து பல்கலைக்கழகம் அல்லது பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University), இந்தி: काशी हिन्दू विश्वविद्यालय) (சுருக்கமாக பிஎச்யூ / BHU) உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் அமைந்துள்ள பொதுத்துறை நடுவண் பல்கலைக்கழகமாகும். 1916ஆம் ஆண்டில் பண்டிதர் மதன் மோகன் மாளவியாவால் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் 30,000 மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும் வசதியுடன் ஆசியாவிலேயே பெரிய வளாகத்தைக் கொண்டுள்ளது.[2][3][1] பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 1,300 ஏக்கர்கள் (5.3 km2) பரப்பளவுள்ள முதன்மை வளாகம் காசியின் பரம்பரை மன்னர் கொடையளித்த நிலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தின் பர்கச்சாவில், வாரணாசிக்கு ஏறத்தாழ 60 km (37 mi) தொலைவில், 2,700 ஏக்கர்கள் (11 km2) பரப்பளவில்,[4] அமைந்துள்ள இராசீவ்காந்தி தெற்கு வளாகத்தில் கிருஷி விஞ்ஞான் கேந்திரா (வேளாண் அறிவியல் மையம்)[5] அமைந்துள்ளது. பனாரசு இந்து பல்கலைகழகத்தில் நான்கு கல்விநிறுவனங்களும் 14 கல்வித்துறைகளும் 140 துறைகளும் உள்ளன.[6] 34 நாடுகளிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000க்குக் கூடுதலாக உள்ளது.[7] இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களுக்காக 60 தங்குவிடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் (இ.தொக (பிஎச்யூ), அறிவியல் மொழியியல், தாளிதழியல், திரள் தொடர்பாடலியல், நிகழ்த்துகலைகள், சட்டம், வேளாண்மை, மருத்துவம் மற்றும் வணிக மேலாண்மை கல்லூரிகள் இந்தியாவின் சிறந்த தரம் வாய்ந்த கல்வி நிலையங்களாக விளங்குகின்றன. [8] குறிப்பாக இங்குள்ள பிரான்சிய கற்கைத்துறை மிகவும் அறியப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகள் ஒன்றிணைக்கப்பட்டு சூன் 2012இல் இந்திய தொழில்நுட்பக் கழகமாக மாற்றப்பட்டது. 2021 செப்டம்பரில் தமிழ் படிப்புகளுக்காக மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பெயரில் தனி இருக்கை உருவாக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.[9][10] சர்ச்சைகள்2019இல் , விதிமுறைக்கு மாறாக வைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கொடியை அகற்றியதற்காக, இப் பல்கலைக்கழகத்தின் மூத்த பெண் அதிகாரியும், தலைமை துணை நிர்வாகியாக இருந்தவருமான கிரண் தாம்லே கட்டாய ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்.[11] சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia