ஐஸ்வர்யா இலட்சுமி
ஐஸ்வர்யா இலட்சுமி (Aishwarya Lekshmi)(பிறப்பு: செப்டம்பர் 6, 1991) ஓர் இந்திய நடிகையும், வடிவழகியுமாவார். இவர் மலையாளப் படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். 2014 ஆம் ஆண்டில் ஒரு வடிவழகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2017 ஆம் ஆண்டில் நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா படத்தின் மூலம் தனது நடிப்பில் அறிமுகமானார்.[2] இவர் மாயநதி (2017), வரதன் (2018), விஜய் சூப்பரும் பௌர்ணமியும் (2019), அர்ஜென்டினா பேன்ஸ் காட்டூர்கடவு (2019) போன்ற படங்களில் தோன்றினார். ஆக்சன் (2019) என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஜகமே தந்திரம் (2021) படத்தில் நடித்தார். இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.[3] ஆரம்ப கால வாழ்க்கைஐஸ்வர்யா, 1991 செப்டம்பர் 6ஆம் தேதி இந்தியாவின் கேரளாவில் பிறந்தார்.[4][5] திருவனந்தபுரத்தின் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் பயின்றார். எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவ நிறுவனத்தில் தனது மருத்துவர் பட்டத்தை 2016இல் முடித்தார். பின்னர், தனது பயிற்சியினையும் இக்கல்லூரியிலேயே முடித்தார். இவர் திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் வசிக்கிறார்.[6] தான் "ஒருபோதும் நடிப்பைத் திட்டமிடவில்லை" என்று இவர் கூறுகிறார். ஆனால் தனது படிப்பை முடித்ததும், நிவின் பாலி நடித்த "நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா" என்ற குடும்ப நாடகப் படத்திற்காக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க இயக்குநர் அல்தாஃப் சலீம் அழைப்பு விடுத்தபோது அதை முயற்சிக்க முடிவு செய்தார். பின்னர் ஆஷிக் அபு எழுதிய காதல் படமான மாயநதியில் ஒரு முன்னனி பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.[7] இந்த படம் ஒரு பெரிய வெற்றியாக மாறியது. மேலும், ஒரு ஆர்வமுள்ள நடிகையாக இவரது பாத்திரம் பாராட்டுக்களைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டில், இவர் பகத் பாசிலுடன் வரதன் படத்தில் தோன்றினார். 2019ஆம் ஆண்டில் ஐஸ்வர்யா விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அர்ஜென்டினா பேன்ஸ் காட்டூர்கடவு, பிரதர்ஸ் டே ஆகிய மூன்று மலையாள படங்களில் தோன்றினார். விஷால் இணையாக ஆக்சன் (2019) என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் இவர் தனுஷுடன் இணைந்து தமிழ் கேங்க்ஸ்டர் படமான ஜகமே தந்திரம் (2021) என்ற படத்தில் தோன்றினார். அதில் இவர் அட்டில்லா என்ற வேடத்தில் நடித்தார். இது நெற்ஃபிளிக்சில் நேரடியாக வெளியிடப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia