ஒகேனக்கல் அருவி நீர்ப் பிணக்குஒகேனக்கல் நீர்ப் பிணக்கு என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கருநாடகம் ஆகியவற்றுக்கு இடையில் ஏற்பட்ட ஒரு மோதல் ஆகும். தமிழ்நாட்டில் புளோரைடினால் பாதிக்கப்பட்ட தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வாழும் 4040,000 மக்களின் குடிநீர் தேவைக்காக ரூ. 13,34 பில்லியன் செலவில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த 2008 பெப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது இதற்கு காரணமாக அமைந்தது.[1] பின்னணிகாவேரி நீர்ப் பிணக்குகாவேரி ஆற்றில் இருந்து வரும் நீரை கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதில் பிணக்கு இருந்து வருகிறது. இது முந்தைய மைசூர் அரசு மற்றும் சென்னை மாகாணம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள் முக்கிய காரணமாகக் கருதப்பட்டு ஒரு நூற்றாண்டு பழமையான பிணக்காக உள்ளது.[2] இந்த நெருக்கடியைத் தணிக்க எடுக்கப்பட்ட பல நல்லிணக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்திய ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகமானது கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் இரு மாநிலங்களின் பேராளர்கள் இரண்டு திட்டங்களுக்கு ஒப்புக் கொண்டனர். ஒன்று கர்நாடகத்தின் மேகேதாட்டு இன்னொன்று தமிழ்நாட்டின் ஒகேனக்கல் திட்டம் ஆகும்.[3] இத்திட்டத்தின் படி, காவிரியின் ஒகேனக்கல் அருவிப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து தமிழக மக்களுக்கு நீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படும்.[4] பெங்களூருக்கான காவிரி நீர் விநியோகத்தை அதிகரித்து பயன்படுத்தப்படுவதை ஆட்சேபிக்கும் தமிழகம் அதை வாபஸ் பெற்றால், இந்திய ஒன்றிய நீர்வள அமைச்சகம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட கர்நாடகம் ஒப்புக் கொண்டது. இதற்கு தமிழகம் ஆட்சேபனை தெரிவித்தது, ஆனால் பின்னர் தமிழகம் பெங்களூருக்கு அதிகப்படியான நீரை வழங்குவதற்கான தனது ஆட்சேபனையை திரும்பப் பெற்றது.[5] கர்நாடகாவில் எழுந்த பரவலான போராட்டங்களுக்கு பின்னர் ஒகேனக்கல் திட்டம் நிறுத்தப்பட்டது. ஒகேனக்கல் தீவு (இடைத்திட்டு) உரிமை தகராறுதருமபுரி மாவட்டத்தின், பென்னாகரம் துணை மாவட்டத்திற்குட்பட்ட கூத்தாபடி ஊராட்சி கிராமத்துக்கு உட்பட்ட ஒரு பகுதியாக ஒகேனக்கல் உள்ளது .,[6] ஆனால் அருவிக்கு அருகில் மக்கள் யாரும் குடியிராத ஒரு தீவுக்கான (இடைத்திட்டு) உரிமையை கர்நாடகம் கோரியது. இதற்காக கர்நாடகத்தின் அரசியல் கட்சியினரும், கன்னட அமைப்பினரும் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின்போது கர்நாடக கவிரிக் கரையில் இருந்து இந்த இடைத்திட்டுப் பகுதிக்கு நீந்தி வந்த ஆர்பாட்டக்காரர்கள் அங்கு கன்னடக் கொடியை நட்டடுவைத்துவிட்டுச் சென்றனர். இந்த போராட்டங்களினால் இரு மாநிலங்களுக்கிடையிலான உறவை மேலும் பாதிப்படைந்தது.[7][8][9] கர்நாடகத்தின் பார்வைஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தால் கவிரி நீரில் அதன் பங்கு பாதிக்கப்படும் என்றும், இந்த அழகிய அருவி அதற்கு சொந்தமானது என்று ( மெட்ராஸ் மாகாணத்தின் முந்தைய நில வரைபடத்தின் அடிப்படையில்) காரணங்களை முன்வைத்து கர்நாடகம் இந்த திட்டத்தை எதித்தது. இதன் மூலம் ஒகனேக்கலில் குடிநீர் திட்டம் சட்டவிரோதமானது என்று குற்றம் சாட்டியது.[8][9] தமிழகத்தின் பார்வைஓகனேக்கல் திட்டத்திற்கு இந்திய ஒன்றிய அரசு 1998 இல் ஒப்புதல் அளித்தது. பெங்களூரு திட்டத்தைப் போலவே இந்த திட்டத்துக்கும் அண்டை மாநிலத்தின் ஒப்புதலும் காவிரியின் கூடுதல் நீரும் தேவை. ஏனெனில் ஒவ்வொரு மாநிலமும் அதன் பங்கைப் பயன்படுத்தும் உரிமை கொண்டவை. இந்து - கர்நாடகா 1998 ஆம் ஆண்டில் ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது: தமிழ்நாடு பரணிடப்பட்டது 2008-04-05 at the வந்தவழி இயந்திரம் காலக்கோடு
மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia