ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம்ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (Plastic surgery) என்பது மனித உடலின் பாகங்களை மறுசீரமைப்பு, புனரமைப்பு, மாற்றங்கள் செய்வதனைக் குறிக்கும். இது ஒப்பனை அல்லது அழகியல் அறுவை சிகிச்சை, புனரமைப்பு அறுவை சிகிச்சை, குருதி வடிச்சு அறுவை சிகிச்சை, கை அறுவை சிகிச்சை, நுண்ணுயிரியல் மற்றும் எரிகாய சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கியது.[1] சொற்பிறப்பியல்இது கிரேக்க மொழிச்சொல்லான πλαστική (τέχνη), plastikē (tekhnē), என்பதிலிருந்து வந்தது. இதற்கு அழகியல் கலை என்பது பொருளாகும்.[2]. இது 1598 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே உறுதிசெய்யப்பட்டது.[3] "பிளாஸ்டிக்" என்ற அறுவைசிகிச்சை வரைவிலக்கணம் முதன்முதலாக 1839 ஆம் ஆண்டில் தோன்றியது, இந்த வார்த்தை 1909 இல் லியோ பாக்கெலாண்டால் உருவாக்கப்பட்டது.[4] வரலாறு![]() ![]() ![]() முறிந்த மூக்கிற்கான நெகிழி அறுவை சிகிச்சைகள் தான் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டது. இதனை செய்தவர் எட்வின் ஸ்மித் பாபிரியஸ் என்பவராவார்.[6]. அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான ஆதாரம் பண்டைய எகிப்திய நூலில் கூறப்பட்டுள்ளது. அதன்படி 3000 முதல் 2500 கிமு வரை அறுவை சிகிச்சை குறித்த ஆய்வுக்கட்டுரைகள் உள்ளதாக கூறப்படுகிறது.[7] கி.மு 800 -ல் இந்தியாவில் புனரமைப்பு அறுவை சிகிச்சை நுட்பங்கள் நடத்தப்பட்டன.[8] சுசிருதா 6 ஆம் நூற்றாண்டில் பிளாஸ்டிக் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை துறையில் முக்கிய பங்களிப்பு செய்த ஒரு மருத்துவர் ஆவார்.[9] கிபி முதல் நூற்றாண்டில் ரோம அறிஞர் ஆலஸ் கொர்னேலியஸ் செல்சஸ் சில வியக்கத்தக்க துல்லியமான உடற்கூறியல் விளக்கங்களை விட்டுச்சென்றார் - உதாரணமாக அவை பிறப்புறுப்பு மற்றும் எலும்புக்கூடு குறித்த அவரது ஆய்வுகளாகும். இவர் ஒட்டுறுப்பு சிகிச்சை உட்பட்ட பல அறுவைசிகிச்சை நுட்பங்களைப் பதிவுசெய்துள்ளார். நவீன உத்திகளின் முன்னேற்றங்கள்![]() பொதுவாக நவீன பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் தந்தையாக சர் ஹரால்ட் கில்லீஸ் என்று கருதப்படுகிறார். இவர் லண்டனில் பணிபுரியும் ஒரு நியூசிலாந்து செவிமடலியல் மருத்துவர் ஆவார். இவர் முதல் உலகப் போரின் போது முகக் காயத்தால் துன்பப்பட்ட வீரர்களுக்கு நவீன முக அறுவை செய்தார்.[10]. ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை சந்திப்பு - 2017ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை வல்லுநர்களின் சந்திப்பு அக்டோபர் மாதம் 6-10 ம் நாள் வரை ஓர்லாண்டா நகரில் நடைபெறுகிறது. இதில் அழகுகலை அறுவைசிகிச்சையின் முன்னேற்றம் பற்றியும்,அறுவை சிகிச்சையின் வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்படுகிறது.[11] துணை-சிறப்பு சிகிச்சைகள்பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்பது ஒரு பரந்த பகுதியாகும். அது பின்வருமாறு பிரிக்கப்படலாம். அமெரிக்காவில், ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை நிபுணர்கள் அமெரிக்க பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை வாரியத்தால் சான்றளிக்கப்பட்டிருக்கின்றனர்.[12] பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் துணைப்பிரிவுகள் பின்வருமாறு: அழகியல் அறுவை சிகிச்சைஅழகியல் அறுவை சிகிச்சை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு அவசியமான ஒரு அங்கமாகும். இதில் முகம் மற்றும் உடல் அழகியல் அறுவை சிகிச்சை ஆகியவையும் அடங்கும். இந்த அறுவை சிகிச்சையினை மேற்கொள்ளும் முன்பு அறுவை சிகிச்சை கொள்கைகளை அறுவை சிகிச்சை செய்பவர் கண்டிப்பாகப் பின்பற்றுதல் வேண்டும்.[13] தீப்புண் அறுவை சிகிச்சைஇந்த வகையான அறுவை சிகிச்சை என்பது இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதலாவது தீக்காயம் ஏற்பட்ட இடத்திலேயே உடனடியாக சிகிச்சை செய்வது. மற்றொன்று,மீளாக்க அறுவைசிகிச்சை என்பது காயம்பட்ட இடத்தில் தசைகளை வைப்பது. மண்டை-முக அறுவை சிகிச்சைமண்டை-முக அறுவை சிகிச்சை (Craniofacial surgery) என்பது இரண்டு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான மண்டை-முக அறுவை சிகிச்சை என்பது பெரும்பாலும் குழந்தைகளின் பிறப்பிலேயே ஏற்படும் குறைகளுக்கான அறுவை சிகிச்சை ஆகும். வயதுவந்தவர்களுக்கான க்ரானியோஃபேஷியல் அறுவை சிகிச்சை என்பது பெரும்பாலும் எலும்பு முறிவிற்காக செய்யப்படுவது ஆகும். நுண் அறுவை சிகிச்சைநுண் அறுவைசிகிச்சை (Microsurgery) என்பது பொதுவாக திசுக்களைத் தேவைப்படும் உடலின் மற்றொரு இடத்திற்கு மாற்றி இரத்தக் குழாய்களை மீண்டும் இணைப்பது ஆகும். மார்பக மறுசீரமைப்பு, தலை மற்றும் கழுத்து புனரமைப்பு, கை அறுவைச் சிகிச்சை / மாற்றீடு, மற்றும் மூச்சிரைப்பு பின்னல் அறுவை சிகிச்சை ஆகியவை இந்த வகைகளில் செய்யப்படும் பெரும்பான்மையான அறுவை சிகிச்சை ஆகும். குழந்தைகளுக்கான ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைவயது வந்தவர்களுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சையை விட இது முற்றிலும் மாறுபாடானது. குழந்தைகளின் பிறப்பிலேயே காணப்படும் நோய்த்தாக்கம், குறைபாடுகளைக் களைவது எளிது என அறுவை சிகிச்சை நிபுணர்களால் கருதப்படுகிறது. பொதுவாக குழந்தைகளுக்கு செய்யப்படும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையளிக்கப்படுவது க்ரானியோஃபேஷியல் முரண்பாடுகள், கூட்டுவிரல் [14] (Syndactyly), பல்விரல் (Polydactyly - அதிக விரல்களுடன் பிறப்பது), உதட்டுப்பிளவு மற்றும் மேலண்ணம் மற்றும் பிறவியிலேயே கைமாறி இருப்பது ஆகியவை அடங்கும். நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள்தோல்திசு மாற்றம் என்பது அறுவை சிகிச்சைகளில் செய்யப்படும் பொதுவான ஒன்றாகும். திசுக்களைப் பெறுநரிடமிருந்தும், நன்கொடையாளர்களிடமிருந்தும் பெறலாம்.
வழக்கமாக, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளிலிருந்து கவனமாக திட்டமிடப்பட்டிருக்கும். எனவே, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையிலிருந்து நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். புனரமைப்பு அறுவை சிகிச்சை![]() தீக்காயங்களால் ஏற்படும் செயல்பாட்டு குறைபாடுகளை சரிசெய்வதற்கு புனரமைப்பு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. முகத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகள் போன்ற அபாயகரமான காயங்கள் அல்லது கூர்மையான உதடுகள் போன்ற பிறவிக்குரிய குறைகள், அசாதாரண வளர்ச்சித் தொற்று மற்றும் நோய், புற்றுநோய் அல்லது கட்டிகள் போன்றவைதான் பெரும்பாலும் செய்யப்படுபவை ஆகும். ஒப்பனை அறுவை சிகிச்சை வழிமுறைகள்![]() ஒப்பனை அறுவை சிகிச்சை என்பது ஒரு நபருடைய தோற்றம் அல்லது வயதான அறிகுறிகளை நீக்குவதையே ஒரே நோக்கமாகக்கொண்டு நிகழக்கூடிய ஒரு விருப்பமான செயல்முறை ஆகும். அமெரிக்காவில் 2014 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 16 மில்லியன் ஒப்பனை நடைமுறைகள் நடத்தப்பட்டன.[15] அமெரிக்காவில் நிகழ்த்தப்படும் ஒப்பனை நடைமுறைகள் எண்ணிக்கை நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. 2001 ஆம் ஆண்டில் 88% இலிருந்து 2014 ஆம் ஆண்டில் பெண்கள் மீது 92% ஒப்பனை நடைமுறைகள் நடத்தப்பட்டன.[16] 2007 ஆம் ஆண்டில் சுமார் 12 மில்லியன் ஒப்பனை நடைமுறைகள் நடத்தப்பட்டன. மிகவும் பிரபலமான அழகியல் / ஒப்பனை செயல்முறைகள் பின்வருமாறு:
முகமாற்று அறுவை சிகிச்சை, உதடு அறுவை சிகிச்சை, கண்ணிமை அறுவை சிகிச்சை, மார்பக மாற்று அறுவை சிகிச்சை, மூக்கு வேலைகள் ஆகியவை மிகவும் பிரபலமான அறுவை சிகிச்சைகள் ஆகும்.[18] சிக்கல்களும் அபாயங்களும்எல்லா அறுவை சிகிச்சையும் ஆபத்துகள் நிறைந்தவையே. ஒப்பனை அறுவை சிகிச்சையின் போது ஹெமாட்டோமா, நரம்பு சேதம், தொற்று, வடு, மற்றும் உறுப்பு சேதம் போன்றவைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.[19][20][21][22] உளவியல் கோளாறுகள்ஊடகங்கள்,விளம்பரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு செய்தாலும் இவை மனநல கோளாறுகளுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.[23].சில சந்தர்ப்பங்களில் வேறு அறுவை சிகிச்சை செய்ய இயலாத/நிபுணர்கள் மறுக்கும் சூழ்நிலையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது அபாயகரமானது.[24] இவற்றையும் காண்க
சான்றுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia