கருப்பை நீக்க அறுவைச் சிகிச்சை
ஹிஸ்டரெக்டமி (hysterectomy) என்பது கருப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை (கிரேக்கὑστέρα மொழியில் ஹிஸ்டெரா என்றால் கருப்பை என்றும் εκτομία எக்டோமியா என்றால் அறுத்து நீக்குதல் என்றும் பொருள்), இது வழக்கமாக பெண்பாலுறுப்பு மருத்துவரால் செய்யப்படுகிறது. கருப்பை நீக்க அறுவை சிகிச்சை என்பது கருப்பையை முழுமையாகவோ (அதாவது கருப்பையின் முழு அமைப்பில் கருவக அடி மற்றும் கருப்பைக் கழுத்து உட்பட ஒட்டுமொத்த கருப்பையையும் களைதல்) அல்லது பகுதி நீக்கமாகவோ களைதல் (சுப்ரா செர்விக்கல் என அழைக்கப்படும் கருப்பை கழுத்துக் குற்றியைத் தவிர்த்து கருப்பை அமைப்பை அகற்றுவது) ஆகும். பொதுவாக பெண்பாலுறுப்பு அறுவை சிகிச்சைகளிலேயே இந்தhf கருப்பை நீக்க அறுவை சிகிச்சை தான் அதிகமாக செய்யப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் மட்டும் 600,000 க்கும் அதிகாமான கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன, அதில் 90% அறுவை சிகிச்சைகள் தீங்கற்ற, ஆறும் கட்டிகளை அகற்றுவதற்காகவே செய்யப்பட்டுள்ளன.[1] இந்த சதவிகிதம் தொழில்வளர்ச்சி அடைந்த நாடுகளில் மிக அதிகம் என்பதால் இத்தகைய கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகள் தேவையற்ற காரணங்களுக்காக செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.[2] கருப்பை அகற்றப்பட்ட பெண்கள் அதற்குப் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது (கருப்பைக் குழாய் மற்றும் சினைப்பையை அகற்றும்போது ஏற்படுவதைப் போன்றே), மேலும் ஹார்மோன் அளவில் குறிப்பிட்ட மாற்றம் ஏற்படுகிறது, இதனால் இந்த அறுவை சிகிச்சை பின்வரும் ஒருசில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே பரிந்துரை செய்யப்படுகின்றது:
நார்த்திசுக் கட்டிகளை அகற்ற (சதை மற்றும் இணைப்பு திசுக்களுடன் கருப்பைக்குள்ளே வளரும் தீங்கற்ற கட்டிகள்) கருப்பையை நீக்குவது வழக்கமாக இருக்கிறது என்றாலும், இவ்வகை கட்டிகளை குணப்படுத்துவதற்கான மாற்று சிகிச்சைகளையும் மாற்று சிகிச்சை முறைகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் வழங்குகின்றனர். கருப்பைக்கு சேதம் ஏற்படாமலே, அறுவை சிகிச்சை மூலம் நார்த்திசுக் கட்டிகளை அகற்றும் மயோமெக்டமி எனப்படும் தசைக்கட்டி நீக்க அறுவை சிகிச்சை கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்துள்ளதாக வரலாற்று மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.[specify] கருப்பையானது ஹார்மோன் உற்பத்தி தொடர்பான இனப்பெருக்க உறுப்பு ஆகும், இனப்பெருக்க காலகட்டத்தில் மகளிர் உடலில் தோன்றும் எஸ்ட்ராஜன் மற்றும் புராஜெஸ்ட்ரான் ஆகியவை சினைப்பைகளில் உற்பத்தியாகின்றன. கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை கல்வி வள அமைப்பு (HERS) உட்பட பல்வேறு மகளிர் சுகாதார கல்வி குழுக்கள் கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சையின் பின்விளைவுகள் மற்றும் மாற்று சிகிச்சை முறைகள் தொடர்பாகவும், மகளிர் அவயவங்களின் செயல்பாடுகளின் முக்கியத்துவம் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன..[3][4][5] நிகழ்வு
தேசிய மருத்துவ புள்ளியியல் மையத்தின் கணக்குகள் படி, கடந்த 2004-ஆம் ஆண்டு கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள 617,000 நபர்களில் 73% பேருக்கு சினைப்பைகள் அகற்றப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில், 60 வயதுக்கு உட்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவருக்கு கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.[6] அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இதுவரையில் சுமார் 22 மில்லியன் பேருக்கு கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 622,000 நபர்களுக்கு கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.[6] இங்கிலாந்தில் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களில் ஐந்தில் ஒருவர் என்ற விகிதத்தில் கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது, இதில் 20% நபர்களுக்கு இந்த அறுவை சிகிச்சையின்போது சினைப்பைகள் நீக்கம் செய்யப்படுகின்றன.[7] அறிகுறிகள்கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைகள் கருப்பையில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவோ, அல்லது ஒட்டுமொத்த இனப்பெருக்க மண்டலம் சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யவோ செய்யப்பட்டு வருகின்றன. கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை வழக்கமாக கீழ்க்காணும் நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு செய்யப்படுகிறது, கருவக தசைப்புத்துகள் (மயோமாஸ்), இடமகல் கருப்பை அகப்படலம் (கருப்பை குழாய்க்கு வெளியே கருப்பை படலத் திசுக்களைப் போன்ற திசுக்கள் வளர்தல்), கருப்பை சுரப்புத் திசுக்கட்டி (இடமகல் கருப்பை அகப்படலம் மேலும் தீவிரம் அடைந்த நிலை), புணர்புழை தொங்கலின் பல்வேறு வகைகள், மாதவிடாயின்போது வழக்கத்தைவிட அதிகமான ரத்தப்போக்கு, குறைந்த பட்சம் மூன்று வகையிலான புற்றுநோய்கள் (சிறுநீரகப்புற்று, கருப்பை கழுத்துப் புற்று, சினைப்பைப் புற்று). மகப்பேற்றுக்குப் பின் ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத ரத்தப்போக்கை சரி செய்ய கடைசி முயற்சியாகவும கருப்பை நீக்கம் செய்யப்படுகிறது.[8] கருப்பை நார்த்திசுக் கட்டிகள் தீங்கற்ற நோய் வகை என்றாலும் அவை மாதவிடாய் ரத்தப்போக்கை அதிகரிக்கச் செய்யவும் அதன் மூலம் நோயாளி அவதிக்குள்ளாகவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு ஏராளமான மாற்று சிகிச்சை முறைகளும், மருந்துகளும் உள்ளன (மாதவிடாயை கட்டுப்படுத்த ஹார்மோன்கள் மற்றும் வலியை கட்டுப்படுத்த ஊக்கமருந்துகள் கலக்காத வகை மருந்துகளும், ஒபியம் மருந்துகளும்); தசைக்கட்டி நீக்கம் (கருப்பைக்கு சேதம் ஏற்படுத்தாமலேயே கருப்பை நார்த்திசுக் கட்டிகளை அகற்றல்), கருப்பை தமனி அகற்றல், மற்றும் தீவிர செவியுணரா ஒலியைப் பயன்படுத்துவது போன்றவை இருக்கிறது. இலேசான நோய் அறிகுறிகள் இருக்கும்போது அதற்கு சிகிச்சை தேவையில்லை நார்த்திசுக்கட்டிகள் கருப்பையின் உள் பட்டையில் அமைந்துள்ள பட்சத்தில் (சப் மியூகோசல்), நார்த்திசுக் கட்டியின் அளவு 4 செ.மீட்டரைவிட குறைவாக இருந்தால் கருப்பை அகநோக்கியின் மூலம் அகற்றும் முறையை தேர்ந்தெடுக்கலாம். கருப்பையின் உள் பட்டையில் அமைந்துள்ள நார்த்திசுக்கட்டியின் அளவு 4 செ.மீட்டரைவிட அதிகமாக இருக்கும்போதும், நார்த்திசுக்கட்டிகள் கருப்பையின் பிற பகுதிகளில் அமைந்துள்ளபோதும், அவற்றை உதரத்திறப்பு தசைநீக்கம் செய்யலாம், இதற்காக கருப்பையை எட்டுவதற்கு பூப்பெலும்புக்கு மேலே கிடைமட்டமாக ஒரு கீறல் ஏற்படுத்துவது வழக்கம். கருப்பை நீக்கும் வகைகள்![]() கருப்பை நீக்கம் என்பதை அச்சிகிச்சை முறையின் பெயரில் உள்ள சொற்களின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால் கருப்பை அகற்றல் என்று மட்டுமே அர்த்தம் ஆகும், இருப்பினும் சினைப்பை, அண்டக்குழாய் மற்றும் கருப்பை வாய் போன்ற உறுப்புக்களையும் சிலசமயம் இச்சிகிச்சையின்போது அகற்றுவதுண்டு.
கருப்பை நீக்கத்தின்போது கருப்பை வாயை நிலைநிறுத்துவதன் மூலம், கருப்பை நீக்கத்திற்கு பிறகும் தங்களது இல்லற வாழ்க்கை தொடர்ந்து மகிழ்ச்சியுடனும் திருப்திகரமாகவும் இருக்கும் என பெரும்பாலான மகளிர் நம்புகின்றனர். கருப்பை வாய் நீக்கம் செய்வதால் உடற்கூறு மற்றும் நரம்பியல் மண்டலத்துக்கு அதிக தடைகள் ஏற்படுவதாகவும், அதன் மூலம் யோனியின் நீள, அகலத்தைக் குறையச் செய்வதாகவும், புணர்புழை மேல்பக்க தொங்கல் மற்றும் புணர்புழைப் பட்டை குறுமணியாக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாகவும் அனுமான அடிப்படையிலான கோட்பாடு ஒன்று கூறுகிறது. தீங்கற்ற மகளிர் நோய் அறிகுறிகளுக்காக அடியோடு கருப்பையை நீக்குவது மற்றும் முழுமையான கருப்பை நீக்கம் செய்தல் போன்ற சிகிச்சை முறைகளை கையாள்வது குறித்து முறையாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் கீழ்க்காணும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.[9]
கருப்பை கழுத்தை நிலைநிறுத்தும்போதோ அல்லது அகற்றும்போதோ இடுப்பு அவயவ தொங்கல் ஏற்படுவதன் விகிதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என பல்வேறு குறுகிய கால சோதனைகளின் போது தெரிய வந்துள்ளது.[10] இருப்பினும், அறுவை சிகிச்சை முடிந்து பல ஆண்டுகளு்க்குப் பிறகும் கூட இடுப்பு அவயவ தொங்கல் ஏற்படுமா என்பது தொடர்பாக துல்லியமான ஆய்வுகள் ஏதும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை, இடுப்பு அவயவ தொங்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் முழுமையான கருப்பை நீக்கம் மற்றும் கருப்பை பகுதி நீக்கம் ஆகிய இரு முறைகளுக்கேற்ப வேறுபடலாம். கருப்பை வாய் நீக்கம் செய்யப்படாதபோது, கருப்பை பகுதி நீக்கம் செய்யப்படுவோருக்கு கருப்பை வாய் பகுதியில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து நீடிக்கும் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதே காரணத்தால், கருப்பை பகுதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு அதன் பிறகு அவ்வப்போது புற்றுநோய் மற்றும் கருப்பைக் கழுத்தின் இயல்புபிறழ்ந்த வளர்ச்சிக்கான அறிகுறிகளை கண்டறிய பாப் ஸ்மியர்ஸ் என்னும் மென்மைப்பூச்சு சோதனையை மேற்கொள்ள வேண்டும். நுட்பம்கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை பல்வேறு முறைகளில் செய்யப்படலாம். அடிவயிற்றில் கீறல் ஏற்படுத்தி அறுவை சிகிச்சை செய்வதுதான் பழமைவாய்ந்த நுட்பம். அதன் பிறகு யோனியின் வழியாக அறுவை சிகிச்சை செய்யும் முறையும் (யோனிக் குழாய் வழியாக கருப்பை நீக்கம் செய்யும் முறை), அதன் பிறகு தான் கருப்பை ஊடுநோக்கியின் மூலம் கருப்பை நீக்கம் செய்யும் முறையும் (தொப்புளுக்கு அருகில் போடப்படும் சிறிய துளையின் வாயிலாக கருவிகளை உட்புகுத்தும் முறை) அறிமுகமாகின. அமெரிக்காவில் நடைபெறும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளில் பெரும்பாலானவை லாபரோட்டமி எனப்படும் உதரத்திறப்பு முறையிலேயே செய்யப்படுகின்றன (லாபரோட்டமி என்னும் அடிவயிற்றில் கீறல் ஏற்படுத்தும் முறையும், லாபரோஸ்கோபி என்னும் கருப்பை ஊடு நோக்கி முறையும் வெவ்வேறானவை). சிசேரியன் பிரிவு அறுவை சிகிச்சையின்போது செய்வதைப் போன்றே அடிவயிற்றில். வழக்கமாக பூப்பெலும்புக்கு மேல் பக்கத்தில் ஒரு குறுக்கு வெட்டு ஏற்படுத்தப்படுகிறது, இது முடிந்த அளவிற்கு நோயாளியின் இடுப்பு பகுதியில் உள்ள உரோம வரிசைக்கு அருகிலேயே வெட்டப்படுவது வழக்கம் ஒட்டுமொத்த இனப்பெருக்க மண்டலத்தையும் அகற்றுவதற்காக, இனப்பெருக்க அமைப்புகளை எளிதில் எட்டுவதற்கு இந்த நுட்பம் மருத்துவர்களுக்கு பெரும் அளவில் உதவுகிறது. அடிவயிற்றுச் சுவரில் கீறல் ஏற்படுத்தப்படுவதால், திறந்த உதரத்திறப்பு அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி இயல்பு நிலைக்கு திரும்ப வழக்கமாக 4 முதல் 5 வாரங்கள் வரையிலும், சில சமயம் அதைவிட அதிக காலமும் தேவைப்படுகிறது. ஆரம்பம் முதலே, நோய் தொற்றும் அபாயம் தான் இந்த நுட்பம் சந்தித்து வரும் மிகப் பெரிய சவால் ஆகும், இருப்பினும் இன்றைய சூழலில் இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. நுணுக்கமான அறுவை சிகிச்சைகள் செய்ய நேரும்போது, அடிவயிற்றுப் பகுதிகளை விரிவாக உற்றுநோக்கி மருத்துவர்கள் செயல்படுவதற்கு திறந்த கருப்பை நீக்கம் தான் மிகச் சிறந்தது. யோனியின் வழியாக செய்யப்படும் அறுவை சிகிச்சை நுட்பம் மற்றும் கருப்பை ஊடுநோக்கியின் மூலமான நுட்பங்கள் உருவாகும் முன்பு, பகுதியான கருப்பை நீக்கம் செய்வதற்கு இதுவே சாத்தியமான ஒரே நுட்பமாக இருந்து வந்துள்ளது, அதே நேரத்தில் இவ்விரு நுட்பங்களும் பகுதியான கருப்பை நீக்கத்தின் போது பயன்படுத்தக்கூடியவையும் ஆகும். குறைந்த காலத்தில் நோய் குணப்படுதல், குறைந்த நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருத்தல் என யோனியின் வழியாக செய்யக்கூடிய கருப்பை நீக்க முறையில் உதரத்திறப்பு கருப்பை நீக்க முறையைவிட ஏராளமான சிறப்பு அம்சங்கள் உள்ளன. சிசேரியன் பிரிவு (கருப்பை மேற்புறத்திறப்பு) பிரசவத்திற்கு பிறகும், புற்றுநோய் அறிகுறிகள் கண்டறியப்படும்போதும், நோய் தீவிரமடையும் அபாயம் உணரப்படும்போதும் மிகச் சாதாரணமாக செய்யப்படும் சிகிச்சை முறை உதரத்திறப்பு கருப்பை நீக்கமே ஆகும். 1970-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கருப்பை ஊடுநோக்கி நுட்பம் வளரத் தொடங்கியபோது, கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் யோனியின் வழியாக செய்யப்படும் கருப்பை நீக்கம் (LAVH) பெண்பாலுறுப்பு மருத்துவர்களிடையே மிகப் பிரபலமானது, அடிவயிற்று செய்முறைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது குறைந்த அளவில் கீறல் ஏற்படுத்துவதும், அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளி விரைவில் மீண்டு வருவதும் இம்முறை பிரபலமடைய முக்கிய காரணங்களாகும். யோனியின் வழியாக செய்யப்படும் அறுவை சிகிச்சை முறையைக்காட்டிலும் கருப்பை ஊடுநோக்கியைப் பயன்படுத்தி யோனியின் வழியாக கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை முறை மேலும் நுணுக்கமான அறுவை சிகிச்சைகளை செய்ய உதவியுள்ளது. கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் யோனியின் வழியாக செய்யப்படும் கருப்பை நீக்க (LAVH) அறுவை சிகிச்சை, கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் தொடங்கப்பட்டு முடிவில் கருப்பை, யோனிக்குழாய் வழியாக அகற்றப்படுகிறது (இச்சிகிச்சையின்போது சினைப்பைகளை தேவைப்பட்டால் மட்டும் நீக்கம் செய்வது வழக்கம்). கருப்பையுடன் கருப்பை வாயும் நீக்கிவிடுவதால், கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் யோனியின் வழியாக செய்யப்படும் கருப்பை நீக்க (LAVH) அறுவை சிகிச்சை ஒரு முழுமையான கருப்பை நீக்கம் ஆகும். கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் செய்யப்படும் கருப்பை பகுதி நீக்க (LASH) அறுவை சிகிச்சை நுட்பம் அதன் பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டது, இம்முறையில் கருப்பையை நீக்கும்போது கருப்பை வாய் நீக்கம் செய்யப்படுவதில்லை, அதனால் மார்சிலேட்டர் எனப்படும் ஒரு வகை மருத்துவ வெட்டுக்கருவியை பயன்படுத்தி கருப்பையை சிறிய துண்டுகளாக வெட்டி, கருப்பை ஊடுநோக்கிக்காக அடிவயிற்றில் போடப்பட்டுள்ள சிறிய துளைகள் வழியாக வெளியேற்றுவது வழக்கம். கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் செய்யப்படும் முழுமையான கருப்பை நீக்கம் (TLH) அடிவயிற்றில், கருப்பையின் மேல் பகுதி வழியாக கருப்பை ஊடுநோக்கியை உட்புகுத்தி செய்யப்படுகிறது. துளைகள் வழியாக மெல்லிய நீண்ட கருவிகள் உட்புகுத்தப்பட்டு கருப்பை அதன் இணைப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது. அதன் பிறகு வெளியேற்றப்படவிருக்கும் திசுக்கள் அடிவயிற்றில் போடப்பட்டுள்ள சிறிய கீறல்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றன. கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் செய்யப்படும் பகுதி கருப்பை நீக்கம் (LSH) கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் செய்யப்படும் முழுமையான கருப்பை நீக்கத்தைப் போன்றே செய்யப்படுகிறது, ஆனால் பகுதி கருப்பை நீக்கத்தில் கருவக அடி மற்றும் கருப்பை வாய் பகுதிகளுக்கிடையே கருப்பை துண்டிக்கப்படுகிறது. ரோபோவின் உதவியால் செய்யப்படும் கருப்பை நீக்கம் கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் செய்யப்படும் கருப்பை நீக்கத்தின் ஒரு வகை, இதற்காக தொலைவிலிருந்து கட்டுப்படுத்தக்கூடிய கருவிகளை பயன்படுத்துவதுடன் அறுவை சிகிச்சை நடைபெறும் பகுதியின் மிகத் தெளிவான பல மடங்கு பெரிதாக்கப்பட்ட முப்பரிமாண காட்சிகள், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு பெருமளவில் உதவுகின்றன.[11] நுட்பங்களை ஒப்பிட்டு பார்த்தல்சிக்கல்கள் மற்றும் இடையூறுகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அடிவயிற்று நுட்பத்தைத் தான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது வழக்கம். மேற்கூறிய சூழல்களில் சிக்கல்களின் விகிதம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான நேரம் ஆகியவை பிற நுட்பங்களைவிட சாதகமாக உள்ள போதிலும் நோய் குணமடைவதற்கு தேவையான காலம் கூடுதலாகவே தேவைப்படுகிறது. குறுங்கால மற்றும் நீண்டகால சிக்கல்கள் குறைவாக இருப்பது, இல்லற வாழ்க்கை திருப்திகரமாக இருப்பதுடன் குறைந்த செலவு, விரைவில் நோய் குணமாதல் என யோனி வழியாக செய்யப்படும் கருப்பை நீக்கம், கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் யோனியின் வழியாக செய்யப்படும் கரு்ப்பை நீக்க (LAVH) அறுவை சிகிச்சை மற்றும் கரு்பபை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் வேறு சில முறைகளை விட சிறந்தது என கண்டறியப்பட்டுள்ளது, (கருப்பை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகள் தொடர்பாக போதிய தகவல்கள் கிடைப்பதில்லை).[12][13] இருப்பினும் இந்த நுட்பத்தை பயன்படுத்தி மேலும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்வது மிகவும் சிரமமாக இருக்கும்[14] அமெரிக்காவின் கொக்ரான் மருத்துவ அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு முடிவு ஒன்றில், மாற்று அறுவை சிகிச்சை முறைகளைவிட யோனி வழியாக செய்யப்படும் கருப்பை நீக்கத்தையே பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும், இந்த ஆய்வில் ரோபோவின் மூலம் செய்யப்படும் கருப்பை நீக்கம் பற்றி குறிப்பிடப்படவில்லை. யோனி வழியாக கருப்பை நீக்கம் சாத்தியம் இல்லாத சூழலில், கருப்பை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை முறையில் சில நன்மைகள் இருந்தாலும், அறுவை சிகிச்சைக்கு அதிக நேரம் தேவைப்படுவது போன்ற சில தீமைகளும் இருக்கத் தான் செய்கிறது.[15] உதரத்திறப்பு அறுவை சிகிச்சை நுட்பத்தை (லாபரோடோமிக்) கருப்பை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை நுட்பத்துடன் (லாபரோஸ்காபிக்) ஒப்பிட்டு பார்க்கும்போது கருப்பை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையின்போது குறைந்த காலத்திலேயே நோய் குணப்படும் என்றாலும், அதிக சிக்கல்கள் ஏற்படுவதுடன் அறுவை சிகிச்சைக்கு நேரமும் அதிகமாக தேவைப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.[15][16] முழுமையாக உணர்வகற்றாமலேயே செய்யக்கூடிய ஒரே கருப்பை நீக்க அறுவை சிகிச்சை முறையானது யோனியின் வழியாக செய்யப்படும் கருப்பை நீக்கம் மட்டுமே, மேலும் இச்சிகிச்சையை புறநோயாளிகளுக்கும் அளிப்பது சாத்தியம் ஆகும் (தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டுமே இவ்வாறு பரிந்துரை செய்யப்படுகிறது). அறுவை சிகிச்சை செய்து முடிப்பதற்கு தேவையான நேரம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[16]
பெரிய அளவிலான நார்த்திசுக் கட்டிகளை கொண்டுள்ள கருப்பையை சரி செய்வதற்கும், பகுதி கருப்பை நீக்கத்திற்கும் உதரத்தில் கீறல் ஏற்படுத்த வேண்டிய நிலை முன்பு இருந்தது ஆனால் நார்த்திசுக் கட்டிகளை அவை இருக்கும் இடத்திலேயே வைத்துக்கொண்டு வெட்டி எடுக்கும் மார்சிலேஷன் முறை, கருப்பை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் கருப்பை நீக்கத்தின்போதும், யோனியின் வழியாக செய்யப்படும் கருப்பை நீக்கத்தின்போதும், சில சமயம் கையாளப்படுகிறது. கருப்பை நார்த்திசுக் கட்டிகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்த பிறகு, அந்நார்த் திசுக்கட்டிகளை கருப்பை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை முறையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கம் செய்கின்றனர்.[17][18] ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கருப்பை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையின்போது இருப்பதைவிட, ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் கருப்பை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் கருப்பை நீக்கத்தின்போது பெரிய அளவிலான கீறல் ஏற்படுத்த வேண்டியதன் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் கருப்பை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் ரத்தப்போக்கு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டிய காலம் ஆகியவை, ரோபோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரு்பபை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சையின்போது மிகக் குறைவாகவே உள்ளன.[19] பயன்பாட்டில் இருந்து வந்த வேறு சில நுட்பங்கள் தற்போது அதிகமாக கையாளப்படுவதில்லை என்பதால் அவற்றை மதிப்பிடுவதில்லை, இந்த நிலையில் கருப்பை ஊடுநோக்கியின் மூலம் செய்யப்படும் பகுதியான கருப்பை நீக்கம் (LSH) தான் மிகச் சிறந்த நுட்பமாக கருதப்படுகிறது.[13] நன்மைகள்தீவிரமான நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே கருப்பை நீக்கம் செய்யப்படுவது வழக்கம், அத்தீவிர நோய்களை குணப்படுத்துவதற்கு இச்சிகிச்சை முறை பெருமளவில் உதவுகிறது. அமெரிக்காவின் மெய்னெ மகளிர் சுகாதார அமைப்பினர் 1994-ஆம் ஆண்டு, ஒரே தன்மையான மகளிர் நோய்களால் அவதிப்பட்டு வந்த சுமார் 800 பேரை உட்படுத்தி நடத்திய ஆய்வின்போது (இடுப்பு வலி, கருப்பை அடியிறங்குதல் காரணமாக சிறுநீரை அடக்க இயலாமை, தீவிர இடமகல் கருப்பை அகப்படலம், அதிக அளவிலான மாதவிடாய் ரத்தப்போக்கு, பெரிய நார்த்திசுக் கட்டிகள், பாலுறவின்போது வலி உண்டாதல் போன்ற மகளிர் நோய்கள்) அவர்களில் பாதிப்பேருக்கு கருப்பை நீக்கம் செய்யப்பட்டதாகவும், பாதிப்பேருக்கு கருப்பை நீக்கம் செய்யப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது. மேலும் கருப்பை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அதன் பிறகு ஒரே ஆண்டில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் கணிசமாக மேம்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தீவிர பாலுறுப்பு நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு, அறுவை சிகிச்சையைத் தவிர்த்து பிற சிகிச்சை முறைகள் தோல்வி அடையும் பட்சத்தில் கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை பெருமளவில் உதவியளிப்பதாகவும், அதைத் தொடர்ந்து அவர்களது ஒட்டுமொத்த உடல் நலம் சீராகி நோயற்ற நிலையை அடைவதாகவும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.[20] அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள்ஏனைய அறுவை சிகிச்சைகளைப் போன்றே கருப்பை நீக்க அறுவை சிகிச்சையிலும் சில அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. மரணவிகிதம் மற்றும் அறுவை சிகிச்சை அபாயங்கள்தீங்கற்ற காரணங்களுக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சையின்போது 1000 நபர்களில் 1 முதல் 6 நபர்கள் வரை உயிரிழத்தல் என்ற வகையில் குறுகியகால மரணவிகிதம் (அறுவை சிகிச்சைக்குப் பின் 40 நாட்களில்) உள்ளது.[21] கர்ப்பிணிகள், புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் மற்றும் பிற தீவிர நோய் நிலைகள் உள்ளோருக்கு மரணவிகிதம் இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும்.[22] நீண்டகாலத்திற்குப் பிறகு ஏற்படும் விளைவுகள் மற்றும் மரணவிகிதம் வெகு குறைவாகவே உள்ளது. 45 வயதுக்கு உட்பட்ட மகளிரு்க்கு இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்படக்கூடிய நீண்டகால மரணவிகிதம் கணிசமாக உயர்வதற்கு கருப்பை நீக்கம் செய்வதைத் தொடர்ந்து ஏற்படும் ஹார்மோன் சம்பந்தமான பக்க விளைவுகளே காரணமாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.[23] கருப்பையை நீக்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பெண்களில் 35% பேருக்கு அடுத்த 2 ஆண்டுகளில் இது தொடர்பான வேறு ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. நோய் மீட்சிக்காலம்உதரத்திறப்பு செய்முறையின்போது மருத்துவமனையில் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரையிலும், யோனி வழியாக கருப்பை ஊடுநோக்கியின் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யும் பட்சத்தில் 2 முதல் 3 நாட்கள் வரையிலும் தொடரந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும். முழுமையாக குணம் அடைவதற்கு நீண்டகாலம் ஆகும், குணமடையும் காலம் அறுவை சிகிச்சை முறையைப் பொறுத்து வேறுபட்டிருக்கலாம். முழுவதுமாக குணமடைவதற்கு 6 முதல் 12 மாதங்கள் வரை ஆகலாம் என குறிப்புகள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சை முடிந்து முதல் 4 மாதங்களில் அன்றாட செயல்பாடுகளில் தீவிர கட்டுப்பாடு தேவை. நோக்கமற்ற அண்டப்பை வெட்டு மற்றும் அண்டப்பை கோளாறுஅண்டப்பைகளை தவிர்த்து கருப்பை நீக்கம் செய்யும்போது ஒன்றையோ, சிலசமயம் இரண்டு அண்டப்பைகளையுமோ நீக்கும் சூழ்நிலை ஏற்படுவதுண்டு.[24] அண்டப்பைகளை தவிர்த்து கரு்பபை மட்டும் நீக்கம் செய்யப்பட்டாலும் கூட, மாதவிடாய் நிறுத்தம் வழக்கத்தைவிட சராசரியாக 3.7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிகழும்[25] கருப்பையை நீக்கும்போது அண்டப்பைகளுக்கான ரத்த ஓட்டம் தடைபடுவதாலோ உட்சுரப்பு இழப்பதாலோ இவ்வாறு நிகழ்வதாக கருதப்படுகிறது. 40% மகளிருக்கு, கருப்பை நீக்கத்தின்போது பாதுகாக்கப்பட்ட எஞ்சிய அண்டப்பையில் கோளாறு ஏற்படுவதாகவும், அதில் பலருக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாகவும் இருந்துள்ளது. கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு மாற்று சிகிச்சை என நம்பப்படும் இடமகல் கரு்பபை அகப்படல நீக்கத்தின்போதும் இதே போன்று நிகழ்வது ஆச்சரியத்திற்குரிய விஷயமே. பெரும்பாலான மகளிருக்கு கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு பின் அண்டப்பைகளில் கட்டி வளர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.[26] முன்முதிர்வு மாதவிடாய்வற்றுதல் மற்றும் அதன் விளைவுகள்சினைப்பைகளை அகற்றும்போது எஸ்ட்ராஜன் மட்டம் கணிசமாக குறைவதுடன், இதயகுழலியம் மற்றும் எலும்பு அமைப்புக்கு எஸ்ட்ராஜன் அளிக்கும் பாதுகாப்பு போய் விடுகிறது. இந்த நிலைமை "அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட மாதவிடாய் வற்றுதல்" என அழைக்கப்படுகிறது, இது இயல்பான மாதவிடாய் வற்றுதலிலிருந்து பெருமளவில் வித்தியாசமானது; முதலில் கூறிய வகையானது உடலுக்கு ஒருவகையிலான ஹார்மோன் அதிர்ச்சியை ஏற்படுத்துவதால் மாதவிடாய் வற்றுவதுடன் ஹாட் பிளாஷஸ் போன்ற அறிகுறிகளையும் உண்டாக்குகிறது, இரண்டாவது கூறிய வகையானது ஹார்மோன் நிலை ஆண்டு தோறும் படிப்படியாக இறங்கி வருவதன் மூலம் ஏற்படுகிறது, இந்த நிலையில் மாதவிடாய் வற்றிய பிறகும் கரு்பபை மற்றும் அண்டப்பைகள் தொடர்ந்து செயல் நிலையிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பை மட்டுமே நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் இதயகுழலிய நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கருப்பையுடன் அண்டப்பைகளும் நீக்கப்படும்போது இந்த அபாய நிலை ஏழு மடங்கு அதிகரிக்கிறது. கருப்பை நீக்கம் செய்யப்பட்ட பிறகு எலும்பு மெலிதல் (மெலிவுறல்) மற்றும் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.[27][28][29][30][31][32] மாதவிடாய் வற்றிய பிறகு எஸ்ட்ராஜன் அளவு குறைவதாலும், இதன் மூலம் ஏற்படும் சுண்ணாம்பு ஆக்கச்சிதை மாற்றம் காரணமாக எலும்புகள் வலுவிழப்பதுமே இதற்கு காரணமாகும். எலும்பு மெலிவுறல் மற்றும் இதய நோய் பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகரிப்பதற்கும், கருவகமெடுப்புக்கும் தொடர்பு உள்ளது. அண்டப்பைகளை தவிர்த்து கருப்பை நீக்கப்படுவோரைவிட, அண்டப்பைகளுடன் கருப்பை நீக்கம் செய்தவர்களுக்கு டெஸ்டாஸ்டெரான் அளவு குறைவாக இருக்கும்.[24] டெஸ்டாஸ்டெரான் அளவு குறைவாக இருக்கும் மகளிரின் உயரம் குறைவதற்கு காரணம் எலும்புகளின் அடர்த்தி[33] குறைந்து வலுவிழப்பதே ஆகும். அதே சமயம் டெஸ்டாஸ்டெரான் அளவு உயர்ந்திருப்பது செக்ஸ் உணர்வு அதிகரிக்க காரணமாகிறது.[34] 45 வயதுக்கு உட்பட்டோரது அண்டப்பையை வெட்டுவதால் நரம்புமண்டலம் மற்றும் மனநிலை பாதிப்புகள் ஏற்பட்டு மரணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் ஐந்து மடங்கு அதிகரிக்கிறது.[35] சிறுநீர் அடக்க இயலாமை மற்றும் புணர்புழை தொங்கல்அறுவை சிகிச்சைக்கு பின்னர் தலைதூக்கக்கூடிய இரு வகையான கோளாறுகள் சிறுநீர் அடக்க இயலாமையும் புணர்புழை தொங்கலும் ஆகும். வழக்கமாக இவ்விருவகை கோளாறுகள் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின் 10 முதல் 20 ஆண்டுகளு்ககு பிறகு ஏற்படுகின்றன.[36] இவ்வளவு காலதாமதமாக ஏற்படும் பின்விளைவுகள் என்பதால் இது தொடர்பாக போதுமான தகவல்கள் அல்லது எண்ணி்க்கைகள் சரியாக பதிவு செய்யப்படவில்லை, கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை முறைக்கும் இவ்வகை பின்விளைவுகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போதிய தகவல்கள் இல்லை. அறுவை சிகிச்சைக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு சிறுநீர் அடக்க இயலாமைக்கான வாய்ப்பு இருமடங்காக உயர்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஏற்படும் சிறுநீர் அடக்க இயலாமையை சரிசெய்வதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதற்கான வாய்ப்பு 2.4 மடங்கு அதிகரிப்பதாக ஒரு நீண்டகால ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.[37][38] கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று 20 ஆண்டுகளு்க்கு பின் புணர்புழை தொங்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு 80%-க்கும் அதிகமாக உள்ளது. சமூக வாழ்க்கை மற்றும் பாலுணர்வு விளைவுகள்பாலுணர்வு அதிகரிக்கும் நேரத்தில் வெளிப்படும் இயற்கையான உராய்வுநீக்கி சில பெண்களு்ககு கணிசமாக குறைவதாகவோ அல்லது நின்று விடுவதாகவோ கண்டறியப்பட்டுள்ளது. கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு புணர்ச்சிப் பரவச நிலையை அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. புணர்புழை குறுகுவதுடன் அது ஒரு மூடிய பை போல் சுருங்கி விடுவதால் பை மற்றும் குடலுக்கான தாங்குதல் இல்லாமல் போய் விடுகிறது. அபூர்வமான இதர பிரச்சனைகள்கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சை சிறுநீரகத் திசுப் பு்ற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம். இது ஹார்மோன் தொடர்பான காரணங்களாலும், சிறுநீர்க்குழாய் காயமடைவதாலும் ஏற்படுகிறது என விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.[39][40] அண்டப்பைகளை தவிர்த்து கருப்பையை அகற்றிய பிறகு வெற்றிடச் சூல் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது, கருத்தரிப்பு கண்டறியப்படாத நிலையில் அது கருப்பைக்கு இறங்கி வருவதற்கு முன்னதாகவே கருப்பை நீக்கம் செய்யப்படுவதால் இவ்வாறு நிகழ்கிறது. இது அபூர்வமான நிகழ்வு தான், பிளாக்வெல் மகப்பேறு மற்றும் மகளிர் நோய் இதழில் இதே போன்ற இரண்டு நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளதோடு மேலும் 20 நிகழ்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.[41] மாற்றுவழிகள்![]() ![]() கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு பல்வேறு வகையிலான மாற்று சிகிச்சைகள் உள்ளன. செயலற்ற கருப்பை ரத்தப்போக்கினால் (DUB) அவதிப்படும் நோயாளிகளுக்கு இடமகல் கருப்பை அகப்படலத்தை அகற்றும் சிகிச்சை வழங்கலாம், புறநோயாளிகளுக்கும் கூட வழங்கக்கூடிய இம்முறையானது கருப்பை படலத்தை வெப்பம், ரேடியோ அலைவரிசை அல்லது இயந்திரவியல் ரீதியாக அகற்றுவது வழக்கம். செயலற்ற கருப்பை ரத்தப்போக்கினால் அவதிப்பட்டு வந்த 90% நோயாளிகளுக்கு இடமகல் கருப்பை அகப்படல நீக்கம் அந்த கோளாறை பெருமளவில் குறைத்துள்ளது. கருப்பை நார்த்திசுக் கட்டிகளை அகற்றி கருப்பையை புனரமைக்கும் செய்முறைக்கு தசைக்கட்டி நீக்கம் (மயோமெக்டமி) என்று பெயர். இந்த மயோமெக்டமி தசைக்கட்டி நீக்கமானது கீறல் ஏற்படுத்தியோ, கரு்பபை ஊடுநோக்கியின் மூலமோ அல்லது யோனி வழியாகவோ செய்யக்கூடிய சிகிச்சை முறை ஆகும்.[42] சரிவு அல்லது தொங்கல் போன்ற பிரச்சனைகளை கருப்பை நீக்கம் செய்யாமலேயே அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்.[43] மாதவிடாய் மிகைப்பை (மெனோரேஜியா), குறைந்த பட்ச துளைத்தல் இடமகல் கருப்பை அகப்படல நீக்கம் செய்து குணப்படுத்தலாம்.[44] கருப்பை தமனி நீக்கம் என்பது கருப்பை நார்த்திசுக் கட்டிகளை அகற்றுவதற்கான குறைந்த பட்ச துளைத்தல் செய்முறையை பின்பற்றும் சிகிச்சை ஆகும். தொடை தமனியை எட்டுவதற்காக பகுதிவாரியான உணர்வகற்றலின் மூலம் கவட்டை வழியாக ஒரு வடிகுழாயை உட்செலு்த்தி கதிர்வரைவியல் கட்டுப்பாட்டில் கருப்பை தமனி நீக்கம் செய்யப்படுகிறது. இச்சிகிச்சை நடைபெறும்போது கருப்பை தமனி வழியாக நடைபெறும் ரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கென்றே எராளமான நுண்கோளங்கள் அல்லது பாலிவினில் ஆல்கஹால் (தக்கை) ஊசியின் மூலம் கருப்பை தமனிக்குள் செலுத்தப்படுகிறது. ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நார்த்திசுக் கட்டிகளின் வளர்ச்சியையும், கடுமையான ரத்தப்போக்கையும் கட்டுப்படுத்த முடிகிறது. கருப்பை தமனியை அகற்றுவதால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் மருத்துவ குறிப்புகள் உள்ளன.[1][2] பெண் ஆணாக மாறுவதன் ஒரு அங்கமாகபாலின மாற்றம் செய்யும்போது ஆணாக மாறும் பெண் அதற்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுடன், இருபுற அண்டக்குழல் வெட்டுடனான கருப்பை நீக்கும் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படுவதுண்டு. அதிக அளவிலான டெஸ்டோஸ்டெரான் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்ப்பதே ஆணாக மாறும் பெண்கள் (FTM) இந்த அறுவை சிகிச்சையை ஹார்மோன் மாற்று சிகிச்சையுடன் விரும்புவதற்கு காரணம், அதே சமயம் மகளிர் ஹார்மோன் சுரக்கும் உறுப்புக்களை நிலைநிறுத்திக்கொள்கின்றனர் (உதாரணமாக கருப்பைப் புற்று மற்றும் ஹார்மோன் விளைவினால் ஏற்படும் கரோனரி தமனி நோய்கள்), அல்லது பாலின மாற்றத்தின்போது நிஜவாழ்வு அனுபவங்களுக்கென்றே மகளிர் ஹார்மோன் சுரப்பிகளை முடிந்த அளவிற்கு அகற்றுகின்றனர்.[45] ஆனால் ஒரு சிலர் அடிப்பக்க அறுவை சிகிச்சையின் மூலம் தங்களது பெண் உறுப்பை அகற்றி அப்பகுதியில் ஆண் உறுப்பைப் போன்ற அமைப்புகள் செய்வதற்கான அறுவை சிகிச்சை செய்வது வரையிலும் காத்திருப்பது வழக்கம்.[46][47] மேலும் காண்க
குறிப்புதவிகள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia